உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

10ம் வகுப்பு தனித்தேர்வு டிச., 1 முதல் விண்ணப்பம்

"எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., - மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித்தேர்வுகளுக்கு, டிசம்பர் முதல் தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு:வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில், 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்கிறது. இதை, தனித்தேர்வாக எழுத விரும்பும் மாணவர்களுக்கு, டிசம்பர் 1ம் தேதி முதல், 15ம் தேதி வரை தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., மாணவர்கள், தேர்வு கட்டணமாக 125 ரூபாய் செலுத்த வேண்டும்.மெட்ரிக் மாணவர்கள், ஒரு பாடத்திற்கு 135 ரூபாய் வீதமும், ஆங்கிலோ இந்திய மாணவர்கள், ஒரு பாடத்திற்கு 85 ரூபாய் வீதமும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.சென்னை நகரில் வசிப்பவர்கள், "அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6' என்ற முகவரிக்கு, சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி., எடுத்து, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.


மற்ற மாவட்ட மாணவர்கள், அரசு கருவூலகங்களில் தேர்வு கட்டணத்தை செலுத்தி, அதன் ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். டி.டி., மற்றும் கருவூல செலுத்துச்சீட்டின் ரசீதின் பின்புறம், மாணவர்கள் பெயர், தேர்வெழுதும் பாடம் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.