உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கல்

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மார்ச் 2011ல் நடக்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் 24ம் தேதி முதல் வரும் மாதம் 6ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். தேர்வெழுத விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை அண்ணா நகரில் உள்ள காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாக கல்வி வாரிய பி-பிளாக் 4வது மாடியில் முந்தைய தேர்வு மதிப்பெண் பட்டியலை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்திய கருவூல ரசீதுடன் பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் 6ம் தேதிக்குள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகம், எண்.9/8. ஆற்றங்கரை வீதி, புதுப்பாளையம், கடலூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். காலக்கெடுவிற்குப் பிறகு வந்து சேரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படாது.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.