உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Red Ribbon Club - Villupuram District.

தமிழகத்தில் 1.6 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு
தமிழகம் முழுவதும் 1.6 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு உதவ சிறப்பு அறக்கட்டளை தொடங்கி செயல்பட்டு வருவதாக மாநில திட்ட இயக்குனர் அமுதா கூறினார்.

உலக எய்ட்ஸ் தினம் டிச. 1 ம்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இளைஞர்கள் மத்தியில் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை தொடர் சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது.

பேரணியை தொடங்கி வைத்த மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குனர் அமுதா நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 1.6 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் அதிகம். எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலன்களுக்காக தனியாக அறக்கட்டளை கடந்த 2009ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது இந்த அறக்கட்டளைக்கு தமிழக அரசு 5 கோடி வழங்கி உள்ளது. இந்த நிதி வைப்பு நிதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வட்டி தொகையை கொண்டு இக்குழந்தைகளுக்கு தேவையான கல்வி, ஊட்டச்சத்து மற்றும் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும். மேலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக இந்த அறக்கட்டளைக்கு தேவையான நிதியை திரட்டும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி நாட்டிலேயே முதன் முறையாக நமது மாநிலத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 1595 குழந்தைகள் இந்த அறக்கட்டளையின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.