உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஆசிரியர் பணியிடங்களுக்கு பரிந்துரை பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 2,030 மற்றும் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்கள் 175 ஆகியோருக்கான சான்றிதழ் சரிபார்த்தலுக்கான வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரைப் பட்டியலை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில வழியிலான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 1,961, தெலுங்கு பிரிவில் 45 பணியிடங்கள், கன்னட பிரிவில் எட்டு பணியிடங்கள், மலையாள பிரிவில் நான்கு பணியிடங்கள் மற்றும் உருது பிரிவில் 12 பணியிடங்கள் என, மொத்தம் 2,030 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன. மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வேலை வாய்ப்பு இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கான முழு விவரங்கள், தமிழக அரசு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. அதேபோல், 175 கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கான பரிந்துரைப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்ச்சியை நடத்தி, இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.