TET MATERIALS | TET QUESTION PAPERS

உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC MATERIALS | TNPSC QUESTION PAPERS

PLUS TWO MATERIALS | PLUS TWO QUESTION PAPERS

KALVISOLAI - TN FLASH NEWS

 1. EasyQ Excel Software Version 1.0 Question Setter | K.Kannappan | மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கு 1 நிமிடத்தில் கேள்வி தாளினை வடிவமைக்க EasyQ Excel Software Version 1.0 Question Setter வெளியிடப்பட்டுள்ளது. | K.Kannappan, PG Teacher (Botany) Rajah’s Higher Secondary School Sivagangai | Mobile:9944642274
 2. TAMIL NADU REVISED SCALES OF PAY FIXATION FORM -2017 | NEW PAY COMMISSION DETAILS, G.OS, FORMS DOWNLOAD | REVISED SIMPLE CALCULATOR | REVISED COMPLETE CALCULATOR | REVISED ULTIMATE CALCULATOR | புதிய ஊதியக்குழு விவரங்கள், கணக்கீட்டு தாள், அரசாணைகள் ....முழுமையான தொகுப்பு ...
 3. PLUS ONE MODEL QUESTION PAPER PUBLISHED | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
 4. WHATS NEW IN KALVISOLAI TODAY
 5. TODAY'S STUDY MATERIALS
 6. TODAY'S QUESTION PAPERS
 7. TNPSC-TRB-ONLINE TEST MATERIALS
 8. ALL LATEST STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
 9. DSE | DGE | DEE | G.O | OTHER DOWNLOADS
 10. KALVISOLAI - TODAY'S HEAD LINES

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Wednesday, February 23, 2011

அரசு வேலைக்கு அதிகரிக்கும் மோகம்


கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசு என்பார்கள் அரசு வேலை பார்ப்பவர்கள். அது சம்பளம் குறைவாக இருந்தபோது சொன்னது. இப்போது நிலைமை  அப்படியில்லை. சம்பளம் அதிகமாகவே கிடைக்கிறது. அதனால்தான் 3500 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் 9.5 லட்சம்பேர்  தேர்வு எழுதியுள்ளனர். அரசு வேலைக்கு இன்னமும் மவுசு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 3,484 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியுள்ளது. 1,077 இடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவின ருக்கும் மீதியுள்ள 2407 இடங்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைகளுக்கு மொத்தம் 10 லட்சத்து 44 ஆயிரம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர். 

85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட, 9 லட்சத்து 59 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த  3,456 மையங்களில் 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 8,007 பேர் எழுதினர். மாணவ, மாணவிகள்,  இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகளும் தேர்வில் பங்கேற்றனர். பல பெண்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில்,  பால் புட்டியும் கையுமாக குழந்தைகளுடன் கணவன்மார் தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனர்.

தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளம் கிடைக்கும். திறமையாக பணியாற்றினால் ஊதிய உயர்வு, பதவி உயர்வு நிச்சயம். ஒரே பிரச்னை, வேலை செய்யா மல் இருக்க முடியாது. வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அதோடு வேலை பார்க்கும்போது, வரும் வருமானம்தான். ஓய்வு பெற்ற பிறகு, கம்பெனிக்கும் ஊழிய ருக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால் அரசு வேலையில் அப்படி இல்லை. வேலை பார்த்தாலும் பார்க்கா விட்டாலும் மாதம் பிறந்தால் சம்பளம். தப்பு  செய்தாலும் யாரும் தட்டிக் கேட்பதில்லை. நினைத்தால் விரல் வீக்கத்துக்குக்கூட விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். உயரதிகாரியால் எந்த டென்ஷனும் கிடை யாது. ஓய்வு பெற்ற பிறகும் கவலையில்லை. கடைசியாக வாங்கிய சம்பளத்தில் பாதி பணம், பென்ஷனாக வரும். சாகும் வரை பணக் கஷ்டம் இல்லாமல்  வாழலாம். 

அதனால்தான் அரசு வேலை மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கல்வித் தகுதி பத்தாவது படித்தால் போதும் என்று இருந்தாலும்  கூட, பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளும் இதுபோன்ற வேலைகளுக்கு முட்டி மோதுகிறார்கள். அதனால்தான் கான்ஸ்டபிள் வேலையில்கூட முதுகலை  பட்டதாரிகள் அதிகம் பேர் இருக்கிறார்கள். சாதாரண வேலைகளில்கூட பட்டதாரிகள் சேர்வது நல்ல விஷயம்தான். போலீஸ், விஏஓ போன்ற துறைகளில் பணியாற்றும்  படித்தவர்கள் 5க்கும் 10க்கும் அலைவதில்லை. கவுரவம் பார்க்கிறார்கள். லஞ்சத்தை வெறுக்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளுக்கு இப்படிப்பட்டவர்கள்தான் அதிகம் தேவை.

2 comments:

 1. SOME MORE COMMENT REG GOVT EMPLOYEES ITS BETTER TO AVOID FUTURE

  THANKS
  REG
  A. SANTHOSH

  ReplyDelete
 2. Govt. may try to display some warnings against corruption in the important corrupt prone offices so that the officials may hesitate to receive bribe and the public will easily inform about corruption immediately and prevent corruption for the welfare of our nation

  ReplyDelete

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.


Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.