உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் மே 13ம் தேதிக்கு பிறகே பணி நியமனம்

"புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6,000 பட்டதாரி ஆசிரியர்களும், சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே பணி நியமனம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. பதிவுமூப்பு அடிப்படையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்திற்காக 1,200 பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க கல்வித் துறைக்கு 1,155 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு 3,665 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 175 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் என, மொத்தம் 6,195 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பட்டியலை, நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி, நேற்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், தேர்வான ஆசிரியர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங் நடத்தாமல், காலியாக உள்ள இடங்களுக்கு நேற்றே பணி நியமனம் செய்து, தபால் மூலம் உத்தரவுகள் அனுப்பப்படுவதாக, தகவல்கள் பரவின. தேர்வானவர்கள், பணி நியமனம் குறித்து, அந்தந்த துறைகளில் கேட்டபடி இருந்தனர். அனைவருக்கும் நேற்றே பணி நியமன உத்தரவுகள் வழங்குவதற்கு, அதிகாரிகள் முயற்சித்தனர். இது தொடர்பாக, அதிகாரிகளுடன் துறை அமைச்சரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. எனினும், நேற்று மாலை, ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கினால், அது தேர்தல் கமிஷன் விதிமுறைகளை மீறியதாக ஆகிவிடும் என்பதால், தேர்தலுக்குப் பின் பணி நியமன உத்தரவுகள் வழங்க முடிவெடுத்திருப்பதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, 6,195 பேருக்கும் மே 13க்குப் பிறகே பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும்.

தேர்வுகளுக்கு பாதிப்பில்லை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி பொதுத்தேர்வுகள், இன்று துவங்குகின்றன. பிளஸ் 2 தேர்வுகள் இன்று முதல் 25ம் தேதி வரை நடக்கின்றன. மெட்ரிக்., மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள், இம்மாதம் 22ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11 வரை நடக்கின்றன. அதே போல், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகள், இம்மாதம் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11 வரை நடக்கின்றன. அனைத்து தேர்வுகளும், ஏப்ரல் 11ம் தேதியுடன் முடிந்துவிடுகின்றன. தேர்தல் காரணமாக, பொதுத்தேர்வுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.