"பிளஸ் 2' சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான முடிவுகள், 25ம் தேதி வெளியிடப்பட்டன.


ஜூன் மற்றும் ஜூலையில், பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள்25ம் தேதி பிற்பகல் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை,"dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.in மற்றும் www.pallikalvi.in'" ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


"தத்கல்'லில் விண்ணப்பித்தவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், அவர்களது வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும். மேலும், தேர்வெழுதியவர்கள் எந்தவொரு பாடத்திற்கும் போட்டோ காப்பி அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை, 28ம் தேதி வரை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் (சென்னை தவிர்த்து) இணை இயக்குனர்(கல்வி), புதுச்சேரி ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: