உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

30ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு


 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு, வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஹால் டிக்கெட் அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தேர்வு மையத்தில் செல்போன், கால்குலேட்டர் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் 2 தேர்வு அறிவிப்பு கடந்த டிசம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. நகராட்சி ஆணையர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட 37 பதவிகள் இதில் இடம் பெற்றிருந்தன.
மொத்தம் 4,329 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை 3ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக 5 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு நெருங்கி வந்த நிலையில், தலைமை செயலக உதவிப் பிரிவு அலுவலர் 281, கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர் 485, ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர் 1,600 என மொத்தம் 2,366 கூடுதல் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி ஜூன் 11ம் தேதி அறிவித்தது.

இந்த கூடுதல் பணியிடங்களுக்கும் சேர்த்து ஜூலை 30ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் அனுப்பும் பணி கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது.ஹால் டிக்கெட்டுடன் 7 பக்கத்தில் இணைப்பு சீட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதில் 3 பக்கத்தில் விண்ணப்பதாரர்களுக்கு 42 அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, ‘விண்ணப்பதாரர் ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்ட தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். 

30 நிமிடத்திற்கு முன்னதாக தேர்வுக் கூட இருக்கையில் வந்து அமர வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு முடிவதற்கு முன்னர் யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். கறுப்பு அல்லது நீல நிற பால்பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில் பயன்படுத்தினால் விடைத்தாள் செல்லாததாக கருதப்படும். 

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.