உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

சமச்சீர் பாடப் புத்தகங்களை வினியோகிக்க, ஆகஸ்ட் 5ம் தேதி வரை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம் அளித்துள்ளது.

சமச்சீர் பாடப் புத்தகங்களை வினியோகிக்க, ஆகஸ்ட் 5ம் தேதி வரை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம் அளித்துள்ளது. சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை தள்ளிவைக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த கல்வியாண்டில், சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும், பாடப்
புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை நீதிபதிகள் பாஞ்சால், தீபக்வர்மா, சவுகான் அடங்கிய, "பெஞ்ச்' விசாரித்து வருகிறது.கடந்த, 21ம் தேதி, சுப்ரீம் கோர்ட், "சமச்சீர் பாடப் புத்தகங்களை உடனடியாக வினியோகித்து, ஆக., 2ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்' என இடைக்கால உத்தரவிட்டிருந்தது. இந்த கால அவகாசத்தை ஆக., 5ம் தேதி வரை நீட்டித்து, சுப்ரீம் கோர்ட் நேற்றுஉத்தரவிட்டது. மாணவர்கள், பெற்றோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜுனா நேற்று வாதாடியதாவது:
எந்த ஆய்வும் நடத்தாமல், சமச்சீர் கல்வி சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமச்சீர் கல்வி எப்போது அமல்படுத்தப்படும் என, திருத்தச் சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. சமச்சீர் கல்வியை ரத்து செய்யும் நோக்கில் தான் இது கொண்டு வரப்பட்டது. ஓராண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதாக அரசு தரப்பில் இன்று கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை செல்லாததாக ஆக்கும் விதத்தில், இந்தச் சட்டத் திருத்தம் உள்ளது. இதில் எந்த அடிப்படையும் இல்லை.முந்தைய அரசு செய்ததற்காக, பதிலுக்கு புதிய அரசு செயல்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியானது. பழைய புத்தகங்களை அச்சடிப்பதற்காக, ஜூன் 1 முதல், 15ம் தேதி வரை பள்ளிகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. மாணவர்களின் விதியோடு இது விளையாடுவது போலாகும். முதல் அமைச்சரவை கூட்டத்தில், சமச்சீர் கல்வியை ரத்து செய்வது என புதிய அரசு எடுத்த முடிவானது அரசியல் ரீதியான முடிவு.கடந்த ஆண்டு ஏப்ரலில், ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பில், பல உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு விட்டன. சில உத்தரவுகள் இன்னும் அமல்படுத்தப்பட வேண்டியுள்ளது என யூகித்தாலும், சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்யும் விதத்தில் திருத்தச் சட்டம் கொண்டு வருவதற்கு இது எப்படி காரணமாகும்? பாடப் புத்தகங்களில், பாடத் திட்டத்தில் சில தவறுகள் இருந்தால், அதை நிர்வாக உத்தரவு மூலம் சரி செய்து கொள்ளலாம். இவ்வாறு மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜுனா வாதாடினார். இவ்வழக்கில், ஆகஸ்ட் 2ம் தேதி வழக்கறிஞர்களின் வாதம் தொடர்கிறது.No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.