உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

சமச்சீர் கல்வி தீர்ப்பு :தமிழக அரசு மேல்முறையீடு


1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கான சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களை இந்த மாதம் (ஜுலை) 22-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்.
 
தமிழக அரசு அமைத்த சமச்சீர் கல்வி ஆய்வுக்குழு பரிந்துரைப்படி ஏதேனும் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்ய வேண்டியதிருந்தால் அதை தெளிவுபடுத்தும் வகையில் குழு அமைத்து மாற்றம் செய்து துணைபட்டியல் இணைப்பாக தயார் செய்து 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்நிலையில் சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 comment:

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.