பள்ளித் தேர்வு முறையில் மாற்றம் : பள்ளித் தேர்வு மதிப்பெண் முறைக்குப் பதிலாக ஏ, பி, சி, டி, இ என கிரேடு வழங்க தமிழக அரசு முடிவு. அடுத்த கல்வியாண்டு 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலும், 2013-14-ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு வரையிலும், நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு.

பள்ளித் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு முறைக்குப் பதிலாக மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. அதாவது மதிப்பெண் போடும் முறைக்குப் பதிலாக ஏ, பி, சி, டி, இ
என கிரேடு வழங்க முடிவு செய்துள்ளது.அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்புகளுககு புதிய கல்விமுறையை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது.மேலும் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு 2013-14-ஆம் ஆண்டுகளில் இப்புதிய முறை விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Comments