உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பள்ளித் தேர்வு முறையில் மாற்றம் : பள்ளித் தேர்வு மதிப்பெண் முறைக்குப் பதிலாக ஏ, பி, சி, டி, இ என கிரேடு வழங்க தமிழக அரசு முடிவு. அடுத்த கல்வியாண்டு 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலும், 2013-14-ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு வரையிலும், நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு.

பள்ளித் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு முறைக்குப் பதிலாக மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. அதாவது மதிப்பெண் போடும் முறைக்குப் பதிலாக ஏ, பி, சி, டி, இ
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நெட் தேர்வு: விண்ணப்பிக்க அக்டோபர் 25 கடைசி

தேசிய அளவில் நடத்தப்படும் கல்லூரி ஆசிரியர் பணியிடத்துக்கான "நெட்' தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 25 கடைசி தேதியாகும்.ஆண்டுதோறும், இந்தத் தகுதித் தேர்வு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஒன்பது, பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு முழு விவரம்:தமிழக அரசு அறிவிப்பு

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு முழு விவரங்களை, தமிழக அரசு அறிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுக்கான 25 மதிப்பெண்கள், பகுதி வாரியாகப் பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளன.


சமச்சீர் கல்வித் திட்டத்தில், அனைத்து வகைப் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு இறுதித் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்த, அரசாணை வெளியிடப்பட்டது.

இதில், கருத்தியல் தேர்வுக்கு, 75 மதிப்பெண்கள் (தியரி) மற்றும் செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் என, அரசு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது, இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு அனுமதித்து ஆணையிட்டுள்ளது.

* அதன்படி, பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்விற்கு, இரண்டரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இயல் அறிவியல் பிரிவுக்கு ஒரு மணி நேரம் 15 நிமிடமும், உயிர் அறிவியல் பிரிவுக்கு, ஒரு மணி நேரம் 15 நிமிடமும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மாற்றுத் திறனுடைய மாணவர்கள், உரிய ஆய்வு அலுவலர்களின் அனுமதியுடன், தாங்கள் சொல்லி, மற்றவர்கள் எழுதும் வகையில், ஏற்பாடு செய்து கொள்ளலாம்.அல்லது, மாற்றுத் திறன் உடைய மாணவர்கள் விரும்பினால், அவர்கள் கருத்தியல் தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை, 100க்கு மாற்றி, வேறுபாட்டை செய்முறைத் தேர்வு மதிப்பெண்களாகக் கணக்கில் கொள்ளலாம்.


* சனிக் கிழமைகளில், செய்முறைத் தேர்வுகள் நடைபெற வேண்டும். செய்முறைத் தேர்வு செய்ய, 80 சதவீதம் வருகைப் பதிவேடு இருக்க வேண்டும். இதில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சலுகை அளிக்கலாம்.


செய்முறைத் தேர்வு கேள்விகள்:
இயல் அறிவியலில், இயற்பியலில் ஒரு கேள்வியும், வேதியியலில் ஒரு கேள்வியும் இடம்பெறும். இதற்கு, தலா 5 மதிப்பெண்கள் வீதம், 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

* உயிர் அறிவியலில், தாவரவியல் பிரிவில் இருந்து ஒரு கேள்வியும், விலங்கியலில் இருந்து ஒரு கேள்வியும் கேட்கப்படும். இதற்கு, தலா 5 மதிப்பெண்கள் வீதம், 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.* மாணவர்களின் ஆய்வுக்கூட வருகைக்கு 1 மதிப்பெண், ஆய்வக செயல் திறனுக்கு 1 மதிப்பெண், ஆய்வக ஈடுபாட்டுக்கு 1 மதிப்பெண் மற்றும் ஆய்வகப் பதிவு குறிப்பேட்டுக்கு 2 மதிப்பெண்கள் என, மொத்தம் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.


தேர்வு செய்வது எப்படி?"கேள்விகளை, செய்முறை ஆய்வுக் கையேடு உள்ள தொகுப்பில் இருந்து, மாணவர்களே குலுக்கல் முறையில் தேர்வு செய்து கொள்ளலாம். கணக்கீடு கேள்விகளுக்கு, ஒரு கணக்கீடு எடுத்தால் போதும்' என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கல்வித்துறை இயக்குனர்கள் விவரம்

கல்வித்துறை இயக்குனர்கள்  
பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு மணி அவர்களும் , தொடக்கக் கல்வித்துறை இயக்குனராக திரு சங்கர் அவர்களும் ,ஆசிரியர் தேர்வு வாரிய  இயக்குனராக திரு அறிவொளி அவர்களும் ,ஆசிரியர் கல்வி இயக்குனராக திரு தேவராஜன் அவர்களும் ,ஆர்.எம்.எஸ்.ஏ இயக்குனராக திரு இளங்கோவன் அவர்களும் ,மெட்ரிக் பள்ளிகள்  இயக்குனராக திருமதி செந்தமிழ்ச்செல்வி அவர்களும் ,நூலகத்துறை   இயக்குனராக திரு அன்பழகன்  அவர்களும்,முறைசாரக்கல்வி  இயக்குனராக திரு கருணாகரன் அவர்களும் பொறுப்பேற்க உள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் விவரம்

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் மாற்றம் :
மேல்நிலைக்கல்வி இணை இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களும், பணியாளர் தொகுதி இணை இயக்குனராக திரு பழனிச்சாமி அவர்களும், மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக திரு.பூ.ஆ.நரேஷ் அவர்களும்  இடைநிலைக்கல்வி இணை இயக்குனராக திரு.ராமேஸ்வரமுருகன் அவர்களும், நூலகத்துறை இணை இயக்குனராக திரு.தங்கமாரி  அவர்களும், ஆசிரியர் கல்வி  இணை இயக்குனராக திரு.கண்ணப்பன் அவர்களும்,  பொறுப்பேற்க உள்ளனர். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இணை இயக்குனர் திரு.கார்மேகம் அவர்கள் அதே பதவியில் தொடர்கிறார் .

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்தியஅரசு ஊழியர்கள் அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

மத்தியஅரசு ஊழியர்கள் அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 2011 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் .
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - தொடக்க ,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2011-2012-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - அரசாணை வெளியிடப்பட்டது

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது

பள்ளிக் கல்வித்துறையில், தமிழ், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியில் ஆகிய ஆறு பாடங்களுக்கும், தொடக்க கல்வித்துறையில் இயற்பியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. மீதமுள்ள பாடங்களுக்கு, பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.


தமிழக ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம். மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை. 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1. ஆர்.அமுதா தேவி, தலைமை ஆசிரியை, ஊ.ஒ.து.பள்ளி, காசம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்
2. கே.சலா, தலைமை ஆசிரியை, ஊ.ஒ.து.பள்ளி, சிட்டியம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்
3. எம்.லூர்து ராணி, தலைமை ஆசிரியை, சென்னை நடுநிலைப்பள்ளி, அரும்பாக்கம், சென்னை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 364 ஆசிரியர்கள் தேர்வு.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 364 ஆசிரியர்கள் தேர்வு.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான வரும் ஐந்தாம் தேதி, சிறப்பாக பணியாற்றிய 364 ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில், "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' சென்னையில் வழங்கப்படுகிறது. விருதுக்குரியோர் பட்டியல், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' சாதாரணமான ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு, பின் ஜனாதிபதி அளவுக்கு உயர்ந்தார் ராதாகிருஷ்ணன். எனினும், ஆசிரியர் பணியை பெரிதும் நேசித்தார். அவரது பிறந்த தினமான செப்டம்பர் ஐந்தாம் தேதியன்று, ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், தேசிய அளவில், "ஆசிரியர் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் தேசிய அளவிலும், அந்தந்த மாநிலங்கள் அளவிலும் தேர்வு செய்யப்பட்டு பாராட்டப்படுகின்றனர். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, ராஷ்டிரபதிபவனில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, விருதுகளை வழங்குவார். 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், நற்சான்றிதழ் ஆகியவற்றை ஜனாதிபதி வழங்குவார். தமிழகத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் 22 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.