Posts

கடந்த ஜூனில் நடந்த, ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், 31ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள், பின்னர் வெளியிடப்படும்.

தமிழகத்தில் 10 மையங்களில் வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின் அடிப்படையில் 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதி முதல் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.

நடப்பு கல்வியாண்டில் (2011-12) RMSA திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கiளை தோற்றுவிக்கவும், 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணிமாறுதல் பெறும் கலந்தாய்வுக்கூட்டம் சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 31.12.2011 சனிக்கிழமை அன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 151 முதல் 250 வரை இடம்பெற்றுள்ளவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஏ.இ.இ.ஓ., பணி, போட்டித் தேர்வுக்கான விண்ணப்பம், உடல் ஊனமுற்றோருக்கு, ஜன., 6ம் தேதி வரை வழங்கப்படும். எனவே 08.01.2012 அன்று நடைபெறுவதாக இருந்த அப்பணிக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

01.01.2012 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தகுதியுடையோர் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்ய துவங்கியது.

"சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர்கள், தற்கொலை செய்வது நின்றுள்ளது'' என, சி.பி.எஸ்.இ., தலைவர் வினித் ஜோஷி கூறினார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 16-ம் தேதி : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் வெளியிடப்படும். இந்த ஆண்டு பொதுத்தேர்வு ஏப்ரல் 16-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிகிறது.

பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்ட்ட 2,623 ஆசிரியர்களுக்கான நேரடி பணி நியமன ஆணைகள் தபால் மூலம் திங்கள்கிழமை அனுப்பப்பட்டன. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் அனுப்பப்படும். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

முப்பருவ முறை : வரும் கல்வியாண்டில் இருந்து, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, பருவந்தோறும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பாடப் புத்தகமும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகியவை ஒரு புத்தகமாகவும், இதர மூன்று பாடங்கள், மற்றொரு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு, பருவந்தோறும் வழங்கப்படும். ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, முப்பருவ முறை, வரும் கல்வியாண்டில் (2012-13) அறிமுகப்படுத்தப்படாததால், பழைய முறைப்படியே இவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும்.

தமிழின் முன்னணி வார இதழான ஆனந்த விகடன் வரவேற்பறை பகுதியில் இந்த வாரம் (21.12.2011) நம் கல்விச்சோலை இணையதளத்தை குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனந்த விகடனுக்கு கல்விச்சோலை உறவுகள் சார்பாக இதய பூர்வமான நன்றிகள்.

தரம் உயர்த்தப்பட்ட தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு 21.12.2011 மற்றும் 22.12.2011 ஆகிய நாட்களில் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நடைபெறும்.

பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 8ம் தேதி துவங்கும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் 8ம் தேதி தமிழ் முதல் தாள், மார்ச் 9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், மார்ச் 12ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 13ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், மார்ச் 16ம் தேதி இயற்பியல், உளவியல் மற்றும் பொருளியல், 19ம் தேதி கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், மார்ச் 20ம் தேதி புவியியல், வணிகவியல், மனையியல், மார்ச் 22ம் தேதி சுருக்கெழுத்து, வேதியியல், கணக்குபதிவியல், மார்ச் 26ம் தேதி உயிரியல், வரலாறு தாவரவியல், வணிக கணிதம், அடிப்படை அறிவியல் மார்ச் 28ம் தேதி இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், தட்டச்சு, சிறப்பு தேர்வுகள், தொடர்பு ஆங்கிலம் மார்ச் 30ம் தேதி புள்ளியில், நர்சிங் தேர்வுகள், பிரக்டிக்கல் தேர்வுகள், அரசியல் அறிவியல் தேர்வுகள் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, அரசாணை வெளியிடப் பட்டது. 2013-14ம் கல்வியாண்டு முதல், 9,10 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். முப்பருவ முறையில் - முதல் பருவம் - ஜூன் முதல் செப்டம்பர் வரையும் , இரண்டாம் பருவம் - அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் , மூன்றாம் பருவம் - ஜனவரி முதல் ஏப்ரல் வரையும் என பிரிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், முதலில் ஆசிரியர் தகுதித்தேர்வை (TET) தான் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.ஆனால், தற்போது அதற்கு கால அவகாசம் இல்லாததால், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும், நேரடியாக போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர். அதன்பின், அவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதுவர் என்று பள்ளிக் கல்வித்துறை செயலர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வி - RMSA- 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவுள்ள 710 நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் ஏற்பளிப்பு - ஆணை வெளியிடப்பட்டது.

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியில் இருந்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறும் கலந்தாய்வுக் கூட்டம், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 9ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னுரிமைப் பட்டியலில், "150 ஏ' வரை இடம் பெற்றுள்ளவர்கள் கலந்துக்கொள்ளலாம் .

தமிழகத்தில் 2011-2012ம் கல்வியாண்டில் 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், தரம் உயர்த்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு முழுவதும் 70 மாவட்டக்கல்வி அதிகாரிகளுக்கு இடமாற்றமும், 46 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. புதிய பணியிடத்தில் பதவி ஏற்கும் அதிகாரிகளுக்கு கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்

மார்ச் 2012 பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வு மாணவர்கள், டிச.,5 முதல், 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு மார்ச் தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 16.12.2011

தமிழ்நாடு முழுவதும் 37 முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 19 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. புதிய பணியிடத்தில் பணியேற்கும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.

""ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி, ஆசிரியர் பணிக்கான ஒரு தகுதியாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மற்றபடி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய அனைத்துப் பணியிடங்களுமே, எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம் செய்யப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, எழுத்துத் தேர்வில் பங்கேற்க முடியும்'' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற, குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயித்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 75 மதிப்பெண்கள் கொண்ட எழுத்துத்தேர்வில் 20 மதிப்பெண்களும், 25 மதிப்பெண்கள் கொண்ட செய்முறைத் தேர்வில் 15 மதிப்பெண்களும் எடுத்தால், "பாஸ்' என அறிவிக்கப்பட்டுள்ளது.