உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 13ம் தேதி மாலை 5:45க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதன்மை கல்வி அலுவலகங்கள், தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 13ம் தேதி மாலை 5:45க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தில் ஒட்டப்படும் மாணவரின் புகைப்படத்தில், ஏற்கனவே பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும். "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.ஒரு பாடத்திற்கு 85 ரூபாய், இரு பாடங்களாக இருந்தால் 135, மூன்று பாடங்களுக்கு 185, நான்கு பாடங்களுக்கு 235, ஐந்து பாடங்களாக இருந்தால் 285 மற்றும் ஆறு பாடங்களையும் எழுத வேண்டும் எனில் 335 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த கட்டணங்களுடன், சிறப்புக் கட்டணமாக 1,000 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.