உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆகஸ்ட் 31-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) ஆசிரியர் தகுதித்தேர்வினை நவம்பர் மாதம் 18-ந்தேதி சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்த உள்ளது. மத்திய தகுதித்தேர்வுக்கு முன்பு விண்ணப்பம் வாங்கி விண்ணப்பிக்கும் முறை இருந்தது.

தற்போது இந்த தேர்வில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, www.ctet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து அதை பிரிண்ட் அவுட் எடுத்து சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகத்திற்கு தேர்வுக்கட்டணத்துடன் அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து செப்டம்பர் 7-ந் தேதிக்குள் அனுப்பிவிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

மத்திய அரசின் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றால் மட்டுமே சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.