உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பள்ளிக்கல்வி இயக்குனராக திரு கே.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார். அன்னாரின் பணி சிறக்க கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.


பள்ளிக்கல்வி இயக்குனராக திரு கே.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், குமளன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த தேவராஜன் 55, எம்.ஏ., - எம்.எட்., பட்டதாரி. 1995ல், போட்டித் தேர்வு மூலம் மாவட்டக் கல்வி அதிகாரியாக தேர்வு பெற்று, பின் முதன்மைக் கல்வி அலுவலராக, பல மாவட்டங்களில் பணியாற்றினார். இணை இயக்குனர் பதவி உயர்வு பெற்று, தேர்வுத்துறை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து வந்துள்ளார். இயக்குனர் பதவி உயர்வுக்குப்பின், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகிய பதவிகளுக்குப் பின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

தற்போது பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், புதிய பாடத் திட்டங்களை மெருகேற்றியது; முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டங்கள் குறித்து பயிற்சி கையேடுகளை தயாரித்து, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளை, தேவராஜன் சிறப்பாக செய்து முடித்தவர். கல்வியில் பின் தங்கியுள்ள வட மாவட்டங்களை முன்னேற்றுவது; ஒட்டுமொத்த கல்வித்தரத்தை உயர்த்துவது; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தரமான, புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது போன்றவை, புதிய இயக்குனர் முன் வைக்கப்பட்டுள்ள சவால்கள்.

1 comment:

  1. SIR I HAVE SELECTED PG TEACHER COMMERCE IN 2010-2011 BATCH. BUT I HAVE NOT RECEIVED SELECTION ORDER FROM TRB TILL DATE.I HAVE RESIGNED MY JOB. WHAT CAN I DO RECEIVE THE SELECTION ORDER FROM TRB AND APPOINTMENT FROM
    CEO ?
    SELVAM COIMBATORE

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.