Posts

CLASS 10, 11,12 TAMIL - QUESTION PAPERS AND ANSWER KEY - PUBLIC EXAMINATION MARCH 2020.
முக்கிய கல்விச்செய்திகள்
DGE TIME TABLE MARCH 2020 SINGLE PAGE
CLASS 10 LATEST STUDY MATERIALS
CLASS 11 LATEST STUDY MATERIALS
CLASS 12 LATEST STUDY MATERIALS
OTHER LATEST STUDY MATERIALS
TNPSC LATEST STUDY MATERIALS
TRB LATEST STUDY MATERIALS
TET LATEST STUDY MATERIALS
NEET LATEST STUDY MATERIALS
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2019-2020
03✅KALVISOLAI JOB ALERT - WhatsApp Group || GROUP 1 || GROUP 2 || GROUP 3 ||
01✅KALVISOLAI JOB ALERT - Facebook Page
LATEST STUDY MATERIALS - ALL

நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வுக்கு, அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது. நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 12ல், தேர்வு நடந்தது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர். அத்தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, "லீக்' ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவம்பர் 4ல், மறுதேர்வு நடக்கும் என, தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, 4ம் தேதி நடக்கும் மறுதேர்வில், ஏற்கனவே பதிவு செய்த, 6.5 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்', தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டி.இ.டி., முதல் தாளில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், "ஹால் டிக்கெட்' நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும் என்று டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

டி.இ.டி. மறு தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

TRB PG RESULT - முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

TNTET KEY ANSWER 2012 | ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

www.trb.tn.nic.in | பள்ளி கல்வித் துறையில், உடற்கல்வி, ஓவியம், தையல் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள்,முதுநிலை ஆசிரியர்கள்,பாலிடெக்னிக்' கல்லூரி 139 விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

HIGH SCHOOL HM PROMOTION ONLINE COUNSELLING - 1.1.2012-ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியலில் 967 முதல் 1398 முடிய உள்ள 430 ஆசிரியர்களுக்கு online மூலம் கலந்தாய்வு 19.10.2012 மற்றும் 20.10.2012 அன்று நடைபெற உள்ளது.

B.T APPOINTMENT ONLINE COUNSELLING | 2008-09, 2009-10, 2010-11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட 83 பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

www.communication.tnschools.gov.in | தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆறு பேர், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .கோவை மாவட்ட சி.இ.ஓ., ராஜேந்திரன், சென்னை மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார் .

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர்.

HR SEC HM PROMOTION COUNSELLING - முதுகலை ஆசிரியர்கள்/ உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 15.10.2012 அன்று காலை 10.00 மணி அளவில் ஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தர வரிசை 482 முதல் 812 வரை உள்ளவர்கள் இதில் கலந்துக்கொள்ளலாம். பதவி உயர்வு பட்டியல் கல்விச்சோலை யில் வெளியிடப்பட்டுள்ளது.

TRB 1,093 Assisitant Professor vacancies | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, விரைவில் வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

TNTET2012 - தமிழ்நாடு முழுவதும் 14-ந் தேதி நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வை 1094 மையங்களில் 6 லட்சத்து 75 ஆயிரத்து 643 பேர் எழுதுகிறார்கள்.அனைவரும் தகுதி பெற கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.

TNPSC GROUP II COUNSELLING | குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங் 15-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு வரை உள்ள முப்பருவ கல்வி முறை அடுத்த ஆண்டில் ஒன்பதாம் வகுப்பிற்கும் நீட்டிக்கப்படுகிறது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, புதிய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வருக்கு, அக்.11 முதல், 13ம் தேதி வரை "ஹால் டிக்கெட்'' வழங்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, திங்கள் முதல், ஹால் டிக்கெட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட், எக்காரணம் கொண்டும், வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளர்கள். அகவிலைப்படி உயர்வு வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு முடிவுகள்ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தெரிகிறது.

ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் நியமனத்தில் எத்தகைய இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவது என்பது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 5ம் தேதி முதல், 8ம் தேதி, பகல் 1 மணி வரை, தேர்வுத் துறை இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வு பெற்றவர் பட்டியல் ரத்து செய்து, புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, மூன்று வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.புதிய பட்டியல் ஒருசில நாளில் வெளியிடப்படும் என தெரிகிறது.

வி.ஏ.ஓ., தேர்வு "கீ-ஆன்சர்' கல்விச்சோலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

வி.ஏ.ஓ. தேர்வு தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியாகும்.