Posts

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியரின் முடிவுகள், வியாழக்கிழமை, தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

TET தேர்ச்சி பெற்றிருந்தாலும் இரட்டைப் பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள் மதுரை கோர்டில் தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

வரும் கல்வி ஆண்டில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.

2014-15 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்பிற்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2015-16), பிளஸ் 2 வகுப்பிற்கும், புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் ஆகின்றன. வரைவு பாடத்திட்டம் பிப்., 13ல் www.tnscert.org என்ற துறை இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

2012-2013 கல்வியாண்டிற்கான மேல்நிலை செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 1 முதல் 18 ம் தேதிக்குள் முடிக்க அரசுதேர்வுகள் இயக்குனர் உத்தரவு.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விரும்புவோர் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

முதுகலை ஆசிரியர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தாவரவியல் உட்பட சில பாடங்களில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் என் இனியப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியலில் ஆன்-லைன் மூலம் திருத்தங்கள் பதிவு செய்ய இயலாத பள்ளிகள் மற்றும் மாணாக்கரின் புகைப்படத்தினை அப்லோடு செய்ய இயலாத பள்ளிகள், இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்திட, அவ்விவரங்களை குறுந்தகட்டில் பதிந்தோ (அல்லது) dgeonline@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ 17.01.2013-ற்குள் அனுப்பிட சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம்அறிவுறுத்தியுள்ளது.

நேரடி டி.இ.ஓ. தேர்வுமுறையில் அதிரடி மாற்றம்: டி.இ.ஓ. தேர்வில் விண்ணப்பதாரர்கள் படித்த பாடங்களில் இருந்து மட்டுமின்றி பொது அறிவு, ஆளுமைத்திறன், உளவியல், நிர்வாகத்திறமை போன்றவற்றை ஆராயும் வகையில் புதிய வினாக்கள் சேர்க்கப்பட உள்ளன. புதிய தேர்வுமுறையில் பொதுஅறிவு தாளும் விருப்பப் பாட தாள் ஒன்றும் இடம்பெறக்கூடும்.மேலும், குரூப்–1 தேர்வை போன்று நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்ணையும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. விரைவில் 12 டி.இ.ஓ. காலி பணி இடங்கள் நேரடித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வில் புதிய தேர்வுமுறை பின்பற்றப்படும் தெரிகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவினை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. துணை கலெக்டர் பதவி உட்பட 162 காலி பணியிடத்திற்கான இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் 1 முதல் 5 -ம் தேதி வரை நேர் காணல் நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற ‌இணையதளத்தில் பார்க்கலாம்.

36–வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 11.01.2013 வெள்ளிக்கிழமை தொடங்கி, 23–ந் தேதி வரை 13 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சியை பள்ளிக்கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி 11.01.2013 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார். 750 ஸ்டால்கள் கொண்ட இந்த புத்தக கண்காட்சியில் 5 லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி புத்தகங்கள் இடம் பெறுகின்றன.

அனைத்து பள்ளிகளிலும் மாலை நேர சிறப்பு வகுப்புகளை 5:00 மணிக்குள் முடித்து, மாணவியரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள் நேரடி நியமனம்: போட்டித்தேர்வு மூலம் 12 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், 12 மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

10 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கான சமூக அறிவியல் பாடத்தின் வினாத்தாள் வெளியானதால் 07.01.2013 அன்று நடைபெறுவதாக இருந்த சமூக அறிவியல் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்டு இத்தேர்வு வரும் 10-ம் தேதி நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

DEO PROMOTION | 51 மாவட்டக் கல்வி அலுவலர்களை பதவி உயர்வு மூலம் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களின் பெயர் பட்டியல் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.

2013 மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் ஜனவரி 7 முதல் 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

பிளஸ் டூ எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும், செய்முறை தேர்வில் குறைந்தபட்சம், 40 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தான் இந்த ஆண்டும் தொடர்கிறது. பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் எழுத்து தேர்வில், 75க்கு, 20 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில், 25க்கு, 15 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும் என்பதும் கடந்த ஆண்டு நடைமுறையே. குறும அளவு மதிப்பெண்களில் தேர்வுத்துறை இந்த ஆண்டு எந்த மாற்றமும் செய்யவில்லை.