- TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

மார்ச் 2013 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவிருக்கும் பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் சில திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக வரும் 14.03.2013 முதல் 25.03.2013 வரை http://www.peps.tn.nic.in/sslc என்ற இணையதளத்தில் பெயர்பட்டியல் வெளியிடப்படுகிறது. அதை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுமுறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே இனி தமிழில் தேர்வு எழுத முடியும். மற்றவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்வு எழுத வேண்டும். புதிய முறையில், சிவில் சர்வீசஸ் பணிகளுக்கும், இந்திய வனப்பணிக்கும் (ஐ.எப்.எஸ்.) சேர்த்து பொதுவாக ஒரே முதல்நிலை தேர்வு நடத்தப்படும். இந்த புதிய தேர்வுமுறை நடப்பு ஆண்டில் இருந்தே அமல்படுத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு மே மாதம் 26–ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் மாதம் 4–ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது
பகவான் வைகுண்ட சுவாமி பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு 04.03.2013 அன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழ் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப் பட்ட அரசுத்தேர்வுகள் அதே நாளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
PGT ONLINE COUNSELLING | 2011-12ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது.
2013-2014 மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்: * வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை. * ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.2,000 வரிச்சலுகை. * முதல் முறையாக ரூ. 25 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவோருக்கு கூடுதலாக ரூ. 1 லட்சம் வரிவிலக்கு.* கல்வித் துறைக்கு ரூ. 65,867 கோடி.ஒதுக்கீடு.
Subscribe to:
Posts (Atom)