Posts

மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

2013 - 14 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் தமிழக அரசு புதிய உத்தரவு.

அண்ணாமலை பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்பிற்கான சேர்க்கை நடைபெற உள்ளது. நுழைவு தேர்வு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி 30.05.2013 | நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் : 7,8,9-06-2013.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு : 2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர்,ஆசிரியர் பயிற்றுநர்,உடற்கல்வி ஆசிரியர்,சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 மற்றும் 29.05.2013 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

PGT BOTANY APPOINTMENT COUNSELLING | ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு மூலம் தேர்வான 196 முதுகலை தாவரவியல் ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 27.05.2013 அன்று அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலை கல்வி வரைவு பாடத்திட்டம் | 2014-2015 ம் கல்வி ஆண்டில் பதினோறாம் வகுப்பிற்கும், 2015-2016 ம் கல்வி ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பிற்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ள மேல்நிலை கல்வி வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013

பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு : ஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை www.dge.tn.nic.in என்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அச்சடித்து, 32 மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. 31ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி தலைமை ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கலந்தாய்வில் 900 தலைமை ஆசிரியர்களுக்கு இட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளன.

2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக நடத்தப்படுகிறது. உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:31.05.2013 கடைசி தேதி :14.06.2013 தேர்வு நாள் : 21.07.2013 மொத்தப்பணியிடங்கள்: 2881

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) வினாத்தாள் மையங்களில் காலை 9 மணிக்கு பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்பதால் தலைமையாசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வர தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்த்தப் பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

தமிழக அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.