Posts

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மாற்றம் | புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு ராமேஸ்வர முருகன் அவர்களையும், தேர்வுத்துறை இயக்குநராக திரு தேவராஜன் அவர்களையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார்.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கான TENTATIVE ANSWER KEY இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2013–2014) பி.எட். பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தெரிகிறது.

ஆசிரியர் தகுதி தேர்விற்கு பயன்படும் சூர்யா பதிப்பகத்தின் வினா வங்கி புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மூன்று நபர் ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதுவரை 88 அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில், 16 மாவட்ட கல்வி அலுவலர்களை, முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், 10 முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 49 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வுகள் முடிவுகள் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு | ஒரு வாரத்திற்குள் "கீ-ஆன்சர்' வெளியீடு | 20 நாட்களுக்குள் தேர்வு முடிவு | பல்வேறு எழுத்துப் பிழைகளுடன் இருந்த வணிகவியல் மற்றும் தமிழ்க்கேள்வித்தாளால் தேர்வர்கள் பாதிக்காத வகையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

TRB PGT EXAM HALL TICKET DOWNLOAD | முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு 21–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ள விண்ணப்பதார்கள் விண்ணப்ப எண்ணையும், ஏதாவது ஒரு பிறந்த தேதியையும் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.68 லட்சம் பேரில் இதுவரை 1.05 லட்சம் பேர் மட்டுமே, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என டி.ஆர்.பி., வலியுறுத்தி உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் முதல்முறை: அரசு பணியில் 5,566 காலி பணி இடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள குரூப்–4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.

கர்ம வீரர் காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15 "கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .

முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாற்றம்: டி.ஆர்.பி.,யில், துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த பூபதி திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. PDF வடிவில் பதிவிறக்கம் ஆவதால் பொறுமையுடன் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கு மொழி ஒரு தடையல்ல என்று கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ். கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முருகன் பேசினார்.

தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

TNTET LATEST NEWS | இடைநிலை ஆசிரியர்களுக்கான டி.இ.டி முதல் தாள் தேர்வுக்கு, இரண்டு லட்சத்து, 65 ஆயிரத்து, 568 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வுக்கு, நான்கு லட்சத்து, 19 ஆயிரத்து, 898 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.ஆக, ஆறு லட்சத்து, 85 ஆயிரத்து, 466 விண்ணப்பங்கள், பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட், 17ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு, ஆகஸ்ட், 18ம் தேதியும் நடக்கிறது. இதற்கான, "ஹால் டிக்கெட்' இம்மாத இறுதிக்குள், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.

நடப்பு ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தகுதிவாய்ந்த தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் தேர்வுக்குழு அமைத்து, வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பத்தை பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.