Posts

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வின்போது தேர்வு அறைகளில் மாணவர்கள் முன்னிலையில் தான் வினாத்தாள் பிரிக்கப்படும் . வினாத்தாள்களும், விடைத்தாள்களும் 20 தாள்கள் கொண்ட பார்சலாக மாற்றி உள்ளோம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

"ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது" என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 காலாண்டு தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால் கேள்விகள் | பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்தப்பட்டது. 80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதி கணக்கிட்டு 90 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

NR PREPARATION | மார்ச் - 2014 பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவ மாணவியரின் விவரங்களை வரும் செப்டம்பர் 23-ம் தேதி முதல் தேர்வுத் துறையின் www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய தயாராக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் 23–ந்தேதி வரை www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் நடக்க உள்ள அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அக்., 15ம் தேதி வரை துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டு கோடி பார்வைகளை கடந்த கல்விச்சோலை | கல்விச்சோலை உங்களின் பேராதரவோடு இரண்டு கோடி பார்வைகளை கடந்து சென்றது. உங்களால் தான் இது சாத்தியமாயிற்று. கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி ! நன்றி !!! நன்றி !!! உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

செப்டம்பர் 2013-ல் நடைபெறவுள்ள இடைநிலைத் தேர்விற்கு (10ம் வகுப்பு)விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து தேர்வுத்துறையால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.tndge.in என்ற இணையதள முகவரியில் 06.09.2013 (வெள்ளிக் கிழமை) முதல் 11.09.2013 (புதன்கிழமை) வரை இணையதளம் மூலம் On-line-ல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வுக் கட்டணம் செலுத்தவேண்டிய கடைசி நாள் 12.09.2013 (வியாழக்கிழமை) மாலை 5.45 மணி வரை ஆகும்.

மனிதனை மனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

பிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு | விரைவில் நடக்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, 05.09.2013 முதல், 10.09.2013 தேதி வரை, www.tndge.in என்ற இணைய தளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

1064 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

TRB NEWS | ஓரிரு நாளில் முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடை | அடுத்த வாரத்தில் தேர்வுப் பட்டியல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதற்கான, முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.