- TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

Direct Recruitment for the Posts of 652 Computer Instructors | 652 கணினி ஆசிரியர்கள் நியமனம் உங்கள் பதிவுகளை சரி பாருங்கள்- சான்றிதழ் சரிபார்ப்பு 24.12.2014 முதல் 30.12.2014 வரை நடைபெறும் வகையில் TRB திட்டமிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் நவம்பர் 26 புதன்கிழமை கடைசி நாளாகும். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம் 24/11/2014 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில், அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.இந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் 95% தேர்ச்சி இலக்கை அடையவேண்டும் அதற்கான முழு முயற்சிகளை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
DSE NEWS | அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநராக (மேல்நிலைக் கல்வி) பணியாற்றி வந்த ராஜராஜேஸ்வரி, இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.) புதிய இயக்குநராக க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டார்.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப்பாடங்களை நடத்த பட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்வதற்கான கவுன்சலிங் 13ம் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலமாக நடக்கிறது.
TRB NEWS | 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 10-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் 26-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வில் முதல்முறையாக குறைந்த பட்ச மதிப்பெண் முறை பின்பற்றப்படவுள்ளது.
PLUS TWO PRIVATE EXAM | 2015 மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி வரை, இணைய தளம் வழியாக மாலை, 5:00 மணி வரை, சேவை மையங்களுக்கு, நேரில் சென்று மாணவர்கள், தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
TRB PGT NOTIFICATION | முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வை அறிவித்தது TRB | விண்ணப்ப விநியோகம் 10.11.2014 முதல் | கடைசி தேதி 26.11.2014 | எழுத்துத் தேர்வு 10.1.2015 | மொத்த பணியிடம் 1807 | தமிழ்-277, ஆங்கிலம்-209, கணிதம்-222, இயற்பியல்-189, வேதியியல்-189, தாவரவியல்-95, விலங்கியல்-89, வரலாறு-198, பொருளியல்-177, வணிகவியல்-135, உடற்கல்வி இயக்குநர்-27 | விரிவான விவரங்கள்..
Subscribe to:
Posts (Atom)