Posts

ஆய்வக உதவியாளர் தேர்வு | 4,362 பணியிடங்களுக்கு மொத்தம் 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் போட்டி | 1,800 மையங்களில் காலை 10 முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் | விடை குறிப்புகளை இன்றே பதிவிறக்கம் செய்ய கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள்.

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

LAB ASSISTANT - SCREEN TEST - HALL TICKET DOWNLOAD | ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்....

4362 ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டை 25/05/2015 திங்கள் கிழமை http://www.tndge.in/ என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எஸ்.ஐ., தேர்வு வினாக்கள் எளிமை: பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி தமிழகத்தில் நடந்த எஸ்.ஐ., தேர்வில் உளவியலில் சில கேள்விகளை தவிர மற்றவை எளிதாக இருந்ததால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வினாத்தாளை விடையுடன் பதிவிறக்கம் செய்யுங்கள் ...

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 4339 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரிவான விவரம் ...

புதிய பென்ஷன் திட்ட காலத்தில் வேறு பணியில் சேர்ந்தவருக்கு, பணி தொடர்ச்சி உள்ளதால் பழைய பென்ஷன் திட்டமே பொருந்தும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

TNPSC Group 4 Exam Result | டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது | 92.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி | 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் | 498 மதிப்பெண் பெற்று 192 பேர் இரண்டாம் இடம் | 497 மதிப்பெண்கள் பெற்று 540 மாணவர்கள் மூன்றாம் இடம் | முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் | இவர்களில் 3 பேர் மாநிலத்தில் முதலிடம், 6 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடம், 10 பேர் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். ..விரிவான அலசல்...

SSLC RESULT APRIL 2015 | எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள்.அனைத்து விவரங்களும் உடனுக்குடன் உங்கள் கையில்........10-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 21 வியாழக்கிழமை காலை 10 மணி | தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 29-ம் தேதி பள்ளிகளில் | மறுகூட்டலுக்கு மே 22 முதல் 27-ம் தேதி வரை |சிறப்பு உடனடி துணைத்தேர்வு பதிவு மே 22 முதல் 27-ம் தேதிக்குள்... எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள்.

இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பை தமிழக அரசு மாற்றியுள்ளது. அதன்படி, இப்போது பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற நவம்பர் 15, 2016 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள் | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. வரும் மே 29ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி | திறமைக்குத் தகுந்த ஊதியம் | இன்றே பதிவு செய்யுங்கள் ...www.findteacherpost.com | தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தெரிவு மையம்.

பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவ, மாணவியர், நேரடியாக www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக நடத்தப் படும் துணைத் தேர்வுகள் ஜூன் 22-ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 26-ம் தேதியும் தொடங்கும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 17) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு மே 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. DOWNLOAD TIME TABLE.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு | இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

TNPSC DEO EXAM RESULT ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.பிரதான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 6,7,8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை தொடங்கியது.விண்ணப்ப விற்பனை மே 28-ம் தேதி மாலை 5 மணி வரை விற்பனை செய்யப்படும்.முதல் கட்ட கவுன்சலிங்கை ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டு இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார்.

'இரண்டு ஆண்டு, பி.எட்., படிப்பை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தாத நிறுவனங்களின் அனுமதி தானாக ரத்தாகும்' என, தேசிய ஆசிரியர் கல்வியியல் பயிற்சி கவுன்சில் (என்.சி.டி.இ.,) எச்சரித்து உள்ளது. தமிழக அரசு, இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காததால், கல்வி நிறுவனங்கள் குழப்பம் அடைந்துள்ளன.

மார்ச் 2015 மேல்நிலைத் தேர்வு | விடைத்தாள் நகல் கோரியும், மறுகூட்டல் செய்யக் கோரியும் 08.05.2015 (வெள்ளிக்கிழமை) முதல் 14.05.2015 (வியாழக்கிழமை) வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பள்ளி மாணாக்கர் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் விரிவான விவரம்...

TAMIL NADU TEACHERS PROMOTION PANEL 2015-2016 | தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் 2015-2016 ஆண்டிற்கான பதவி உயர்வு பட்டியலை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பிளஸ் 2 தேர்வு முடிவு: கோவை நிவேதா, திருப்பூர் பவித்ரா முதல் இடம் | கோவையை சேர்ந்த நிவேதா, 1192 மதிப்பெண்களும், திருப்பூரைச் சேர்ந்த பவித்ரா 1192 மதிப்பெண்களும் பெற்றும் மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ளனர். முழு விவரம்...

PLUS 2 RESULT | பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள்.அனைத்து விவரங்களும் உடனுக்குடன் உங்கள் கையில்........

அரசு பள்ளிகளில், 4,360 ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, இன்று மே 6 கடைசி நாள். நேற்று மாலை வரை, தமிழகம் முழுவதும், 7.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.இன்று விண்ணப்பம் பெற்றவர்கள் கூட்ட நெருக்கடியால், இன்று மாலைக்குள் பதிய முடியாவிட்டால், அவர்கள் நாளைக்கும் சேவை மையத்துக்கு வந்து, புகைப்படம் எடுத்துப் பதிவு செய்யலாம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள் | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. வரும் மே 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் 06.05.2015 (புதன்கிழமை) அன்று தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது.