Posts

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் கலந்தாய்வு மாறுதலுக்கு 31.07.2015 முதல் 06.08.2015 (தொடக்கக் கல்வி), 07.08.2015 (பள்ளிக்கல்வி) வரை விண்ணபிக்கலாம்.

ஆசிரியர் கலந்தாய்வு நெறிமுறைகளில் மாற்றம் : 3 ஆண்டுகள் என்பது 1 ஆண்டாக குறைகிறது.பதவி உயர்வு பெற்றோருக்கு தடை ஏதும் இல்லை. ஆகஸ்ட் முதல் வாரம் முதல் விண்ணப்பங்கள் பெறப்படுதல். இரண்டாவது வாரம் முதல் கலந்தாய்வு. ஆகஸ்டுக்குள் கலந்தாய்வை முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அப்துல் கலாமின் உடல் மண்ணில் விதைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் மக்கள் கண்ணீர் அஞ்சலி.

TNPSC GROUP 2 OFFICIAL ANSWER KEY DOWNLOAD | TNPSC NEWS | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வுக்கான விடைகள் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுவிடுமுறை | முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறுதிச்சடங்கை முன்னிட்டு ஜூலை 30-ந் தேதியன்று (நாளை) அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களுக்கு பொதுவிடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கண்ணீர் அஞ்சலி | மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், இன்று (புதன்கிழமை) ராமேசுவரம் கொண்டு வரப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை (வியாழக்கிழமை) ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

TNPSC GROUP 2 ANSWER DOWNLOAD | TNPSC NEWS | குரூப் - 2 முதல் நிலைத் தேர்வை, 4.65 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 89 மகப்பேறு மற்றும்குழந்தைகள் நல அலுவலர் பதவிக்கு, முதன்முறையாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த உள்ளது; விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

தனியார் பள்ளிகளில் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்களுக்கு உதவும் www.findteacherpost.com.

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதியை ஆன்லைனில் பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வு உச்சநீதிமன்ற வழக்கு | 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வதால் வழக்கை இரண்டு வாரகாலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், காலியாக உள்ள இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

டிப்ளமோ நர்ஸிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.ஆகஸ்ட் 4-ம் தேதி கடைசி நாள்.

பள்ளிக் கல்வித் துறையின் இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக பி.ஏ. நரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த குமார் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு | அரசிடம் அனுமதி பெற்ற பிறகு, விரைவில் அதிகாரப்பூர்வ கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

SI RESULT 2015 | SUB-INSPECTORS OF POLICE | RESULTS OF THE WRITTEN EXAMINATION | விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண் மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி 2015-ம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர் (தாலுகா) எழுத்துத் தேர்வின் முடிவினை பார்த்துக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் அரசு ஆணைகளின்படி அடுத்தகட்ட தேர்விற்கு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் வகுப்புவாரி ஒதுக்கீட்டின் கீழ் 1:5 விகிதத்தில் 5 மடங்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ள விவரத்தினை தெரிந்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 (நேர்முகத்தேர்வு பதவிகள்) முதல்நிலைத் தேர்வு ஜூலை 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால்டிக்கெட்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

TEACHERS GENERAL COUNSELLING 2015-2016 | ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பொது கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், ஆன்லைன் வழியே கலந்தாய்வு நடைபெறும் என்றும், பொது கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு என அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் என்றும், ஜூலை 29 ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு பள்ளிக்கல்வி இயக்குநரால் விரைவில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மாறுதல் கோரும் புதிய விண்ணப்ப படிவம் வெளியிடப்பட உள்ளது.

மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் இன்று 17.07.2015ம் தேதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வெளியாகிறது.தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதியை ஆன்லைனில் பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட பத்து பாடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 6.15 லட்சம் மாணவர்களுக்கு இந்த ஆண்டில் ரூ.233.17 கோடியில் இலவச சைக்கிள் விநியோகம் முதல்வர் தொடங்கி வைத்தார்.

ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மீண்டும் சென்னை லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனமே நிகழாண்டில் நடத்த உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

கல்லூரிகளில் பணியாற்ற புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,006 உதவி பேராசிரியர்களில் 5 பேருக்கு தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

G.O NO 232 DT 13.07.2015 | ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்-2015 கலந்தாய்விற்கான அரசாணை வெளியிடப்பட்டது. DOWNLOAD G.O.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து பொது நல வழக்கு; இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வருகிறது.

B.Ed. Examination Results - MAY/JUNE 2015 | பி.எட் ., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

TNPSC NEWS | 74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு . குரூப்-1 தேர்வு எழுத இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசி நாள்.முதல் நிலை தேர்வு நவம்பர் மாதம் 8-ந்தேதி நடக்கிறது.

முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வரும், 15ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

விரைவில் ஆசிரியர்கள் பணி இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த சாருஸ்ரீ 6-வது இடம்பிடித்து சாதனை புரிந்தார் | சிவில் சர்வீசஸ் தேர்வில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 62 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

KALVISOLAI - HEADLINE | பி.எஸ்.சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான, மருந்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம், அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரிகளில் கிடைக்கும்.

ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில் தேர்வான இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP 2 | நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 2266 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு 15.07.2015 அன்று முதல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 விழுக்காடு - மாணவர் சேர்க்கை பெற வாய்ப்பு.

DSE PAY AUTHORIZATION ORDERS DOWNLOAD | பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பல்வேறு பணிகளுக்கான சம்பள தொடர் நீடிப்பு ஆணை.

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட் . பட்டப் படிப்பு தொடங்கப்படும் என்று , துணைவேந்தர் ஜி . விஸ்வநாதன் தெரிவித்தார்.

அரசு துறைகளால் நடத்தப்படும் பள்ளிகளில் படித்து முதல் இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரூ.10.50 லட்சம் பரிசு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலைப் பணி மற்றும் தொகுதி-VIIIல் அடங்கிய செயல் அலுவலர் நிலை-IV பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 06.07.2015 அன்று சென்னை-3 பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

G.O Ms.No.183 - Contributory Pension Scheme (CPS) - வட்டிவிகிதம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.