உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு இளைஞர் காவல் படைக்கு 10,500 பேர் நியமனம் | தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற் கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணி யாளர் தேர்வு வாரியத்தால் 2014-ல் சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 10 ஆயிரத்து 99 நபர்களில், 8 ஆயிரத்து 500 பேர் இரண்டாம் நிலைக் காவலர்களாகத் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு, மேலும் 10 ஆயிரத்து 500 பேர், 2017 மற்றும் 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, "தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர அடுத்த மாதம் 23-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. இதனை அனைத்து தபால் நிலையங்களிலும் பெற் றுக் கொள்ளலாம். அக்டோபர் 1-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. தேர்வு நாள் நவம்பர் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது" என்றார்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.