உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு.தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய கால அவகாசம் அளித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு | அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித் தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளில் (கணிதம், இயற்பியல், வேதியியல் ஆங்கிலம்) 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் ஓர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட பொறி யியல் பாடத்தில் முதல் வகுப்பு பட்டமும் பொறியியல் அல்லாத பிரிவு எனில், குறிப் பிட்ட பாடப்பிரிவில் முதுகலை படிப்பில் முதல் வகுப்பு பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், பொறியியல் விரிவுரையாளர் தேர்வுக்கு முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெறாத பட்சத்தில் முதுகலை படிப்பில் (எம்இ, எம்டெக்) முதல் வகுப்பு பெற்றிருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர் ஆவர். ஆனால், அதற்கான வாய்ப்பு விண்ணப்பத்தில் இல்லாததால் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விரிவுரையாளர் தேர்வுக்கான அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று 1058 விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பை ரத்துசெய்து உத்தரவிட்டது. விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 7-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக இந்த தீர்ப்பு வெளியானது. ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. இதைத்தொடர்ந்து, கடைசி நாளான ஜூலை 7-ம் தேதி வரையிலும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த வண்ணம் இருந்தனர். ஒருசிலர் நீதிமன்ற உத்தரவு காரணமாக, விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா? வேண்டாமா? என்று குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால், ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பு (60 சதவீத மதிப்பெண்) பட்டம் பெற்றி்ருக்க வேண்டும். முதுகலை பொறியியல் பட்டதாரி யாக இருந்தால் இளங்கலை அல்லது முதுகலைப் படிப்பில் முதல் வகுப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு மூலம், பிஇ, பிடெக் படிப்பில் முதல் வகுப்பு பெறாமல் எம்இ, எம்டெக் படிப்பில் முதல் வகுப்பு பெற்றிருப்பவர்களும் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆகிறார்கள். எனவே, இதுபோன்ற கல்வித்தகுதி உடைய நபர்கள் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய கால அவகாசம் அளித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, எழுத்துத்தேர்வுக்கான தேதியும் தள்ளிவைக்கப்படும்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.