உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC - LAB ASSISTANT EXAM. HALL TICKET DOWNLOAD

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 02/2018 நாள். 25.01.2018-ன்படி 56 பணியிடங்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஆய்வக உதவியாளர் (Forensic Science Department) பதவிக்கான எழுத்துத்தேர்வு 06.05.2018 அன்று முற்பகல் மட்டும் சென்னை உட்பட 8 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. சரியான முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் செலுத்தியுள்ள தகுதியான விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். | The Commission has issued Notification No.02/2018 dated: 25.01.2018, for the Written Examination for 56 vacancies in the post of Laboratory Assistant in Forensic Science Department for the year 2016-2018 in the Tamil Nadu Forensic Science Subordinate Service. The examination which is scheduled to be held on 06.05.2018 FN at 8 district centres including Chennai. The Memo of admission (Hall Ticket) for the eligible candidates has been hosted in the Commission's website (www.tnpsc.gov.in and www.tnpscexams.net). If there is any doubt in downloading Hall Ticket, the candidate may got clarified from the Commission's e-mail ID contacttnpsc@gmail.com or the Commission's Grievance Cell toll free number 1800 425 1002.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு அரசாணை வெளியீடு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு அரசாணை வெளியீடு | அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாக சீர்கேடு காரணமாக ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு தமிழக அரசே கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொண்டது. இந்த நிலையில் தற்போது அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் படிப்புகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் நேற்று வெளியிட்டுள்ள அரசு ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 10 பிரிவுகள் உள்ளன. இது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் இந்த பாடப்பிரிவுகளில் 1,020 மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகம் 2013-ம் ஆண்டு சட்டப்படி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை-2018 ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வில் சேர்த்து நடத்த வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கோரிக்கை விடுத்து இருந்தார். அதை அரசு நன்கு பரிசீலனை செய்து என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேருவதற்கு தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்த இந்த கல்வியாண்டு (2018-2019) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் படிப்புகளுக்கும் இனி அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்த இருக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தொடக்கக்கல்வித்துறை | Student Cumulative Record | மாணவர் சேர்க்கை வின்ணப்பம் DOWNLOAD.

தொடக்கக்கல்வித்துறை | Student Cumulative Record | மாணவர் சேர்க்கை வின்ணப்பம் - DOWNLOAD. | DOWNLOAD | DOWNLOAD - S.Samuel Selvaraj B.Sc,M.A.,B.Ed Science BT,Coimbatore-38.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது.முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது | பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும்திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில், கல்வித் தரத்தை உயர்த்தவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, கல்வி அமைப்பில் மாற்றம் செய்யவும், பள்ளிக்கல்வி அமைச்சர்செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இதன்படி, 13 ஆண்டு கால பழைய பாடத் திட்டம், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், தேர்வுத் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொது தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.மொபைல் போனில் தேர்வு முடிவுகள்,எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பும் திட்டம், 2017ல் அமலானது.இந்நிலையில், மாணவர்களுக்கான தேர்வு சுமையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளில், தமிழ் அல்லது விருப்ப மொழிப் பாடம் மற்றும் ஆங்கில பாடங்களில், தலா இரண்டு தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதை, ஒவ்வொரு மொழிப் பாடத்துக்கும், ஒரு தாளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவால், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, தற்போது நடத்தப்படும் எட்டு தேர்வுகள், ஆறு தேர்வுகளாக குறையும். இதனால், மாணவர்களுக்கும், தேர்வுத் துறைக்கும் சுமை குறையும் என, கல்வியாளர்கள் தரப்பில், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதன்படி, வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு மட்டும், மொழி பாட தேர்வின் எண்ணிக்கையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும், விரைவில் அரசாணையாக, மொழிப் பாடத் தாள் குறைப்புக்கான அறிவிப்பு, வெளியாக உள்ளது.அதேபோல், மொழி பாடங்கள் மட்டுமின்றி, முக்கிய பாடங்களின் தேர்வு எண்ணிக்கையை குறைக்கவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.'முக்கிய பாடங்களை குறைக்க, கல்வியாளர்கள் தரப்பில், முரண்பாடான கருத்துகள் உள்ளதால், விரிவான ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNEA ADMISSION 2018 | பி.இ., - பி.டெக்., இன்ஜினியரிங் படிப்புக்கான, ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விதிமுறைகள், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பி.இ., - பி.டெக்., இன்ஜினியரிங் படிப்புக்கான, ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விதிமுறைகள், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் : பிளஸ் 2 முடித்த, கணிதம் மற்றும் தொழிற்கல்வி மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.தமிழகத்தில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரி களில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, முதலாம் ஆண்டுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். இது, நடப்பாண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கி, மே, 30ல் முடிகிறது. 'சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் முதல் வாரத்தில் நடக்கும். 'ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறை, ஜூலை முதல் வாரத்தில் துவங்கும்' என, தமிழக, இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.விண்ணப்ப பதிவு : எந்த பிரிவு மாணவர்களுக்கு, எப்போது, ஆன்லைன் கவுன்சிலிங்: அதன் விதிகள் என்ன; விண்ணப்ப பதிவு எப்படி என்பது போன்ற விதிமுறைகள்,அதிகாரப்பூர்வ அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu/ என்ற இணையதளம் மற்றும், https://tnea.ac.in என்ற இணையதளத்தில், விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNUSRB - POLICE EXAM 2018 - CUTOFF MARKS DETAILS

TNUSRB - POLICE EXAM 2018 - CUTOFF MARKS DETAILS


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் | இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது ஒருநபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன் ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பணிக்கு வந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளமும் அதற்கு முன் பணியில் இணைந்தவர்களுக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது. ஆறாவது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இந்த ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் நடத்தி வந்தனர். கடந்த நாட்களாக நடைபெற்ற இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து அமைச்சர் செங்கோட்டையனுடன் கிண்டியில் இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் பழச்சாறு அருந்தி உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஒருநபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

விடைத்தாள் திருத்தம் முடிந்த பின், ஜூனில் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, பள்ளிக்கல்வித்துறை ஆலோனை

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். முழுமையாக ஒரு கல்வி ஆண்டில், ஒரே இடத்தில் பணியாற்றியோர், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். ஆண்டுதோறும், மே மாத துவக்கத்தில் கவுன்சிலிங் துவங்கி, மாத இறுதியில் முடிக்கப்படும். புதிய கல்வி ஆண்டில், வகுப்புகள் துவங்கும்போது, புதிய இடத்தில் ஆசிரியர்கள் பணிக்கு செல்வர்.இந்த ஆண்டு, தொடக்கப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆன்லைன் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை விபரங்கள், மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, ஆன்லைன் முறையில், தகவல்கள் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கை, மே மாத இறுதிக்கு தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், மே, 16 வரை விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. எனவே, விடைத்தாள் திருத்தம் முடிந்த பின், ஜூனில் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்துள்ளது.விடைத்தாள் திருத்த பணிகள் இல்லாத தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், மே மாதம் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஒருநபர் குழு பரிந்துரைப்படிதான் ஊதிய முரன்பாடுகளை களைய முடியும் ஆசிரியர் போராட்டத்தை கைவிட வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

ஒருநபர் குழு பரிந்துரைப்படிதான் ஊதிய முரன்பாடுகளை களைய முடியும் ஆசிரியர் போராட்டத்தை கைவிட வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளால் மட்டுமே ஊதிய முரண்பாடுகளை களைய முடியும் என்பதால் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 6-வது ஊதியக் குழுவுக்கு முன்பு அதாவது 31-12-2005 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4,500 – 125 – 7000 என்ற ஊதிய விகிதம்இருந்தது. 6-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி ரூ. 5,200 – 20,200 + தர ஊதியம் 2,800 என திருத்திய ஊதிய விகிதம் 1-1-2006 முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஒருநபர் குழு பரிந்துரையின்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 1-8-2010 முதல் மாதம் ரூ.500 சிறப்புப் படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்புப் படியை ரூ. 750 ஆக உயர்த்தி தனி ஊதியமாக வழங்க 12-1-2011-ல் ஆணையிடப்பட்டது. 1-1-2011 முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ரூ.20,600 – 65,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தனி ஊதியம் ரூ.750-லிருந்து ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 14,719 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டது. ஆனாலும் பல்வேறு தரப்பு ஊழியர்களின் நலன் கருதி அரசு இதனை ஏற்றுக்கொண்டது. அதோடு இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தியதால் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளைக் களைய ஒரு நபர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரையால் மட்டுமே ஊதிய முரண்பாடுகளை களைய இயலும். மேலும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) பிறருடைய தூண்டுதலின்பேரில் கடந்த 23-ம் தேதி முதல் எந்தவித முன்னறிவிப்போ, அனுமதியோ இல்லாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நானும், பள்ளிக்கல்வித் துறை செயலாளரும் அவர்களை அழைத்து பேசிய பிறகும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்தப் பிரச்சனைக்கு ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாகவே தீர்வு காண முடியும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி உண்ணாவிரதம் இடைநிலை ஆசிரியர் போராட்டம் தீவிரம் 50 பேர் மயக்கம்; மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி உண்ணாவிரதம் இடைநிலை ஆசிரியர் போராட்டம் தீவிரம் 50 பேர் மயக்கம்; மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு ஊதிய முரண்பாட்டை களையக் கோரி யில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. உடல் சோர்வு மற்றும் மயக்கம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர்  மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 1.6.2009-க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்குப் பின்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய விகிதத்தில் பெரிய அளவில் வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம வேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஊதிய முரண்பாட்டை சரிசெய் யக் கோரி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடந்த திங்கள்கிழமை குடும்பத்தோடு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத் தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

GO 288 DATE 24.04.2018 - RMSA - POST CONTINUATION PAY ORDER - 3550 B.T, 710 LAB ASSISTANT AND 710 JUNIOR ASSISTANT - CLICK HERE

RMSA - தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 3550 பட்டதாரி பணியிடங்கள்,710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4970 பணியிடங்களுக்கு 31-12-2020 வரை தொடர் நீட்டிப்பு ஆணை. G.O : 288 DATE 24.04.2018 - RMSA - POST CONTINUATION PAY ORDER - 3550 B.T, 710 LAB ASSISTANT AND 710 JUNIOR ASSISTANT - CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

INCOME TAX 2019 EXCEL SOFTWARE 2019 VERSON 3 | VISWANATH P P.E.T - CHENNAI - 9894635962 | DOWNLOADINCOME TAX 2019 EXCEL SOFTWARE 2019 VERSON 3 | VISWANATH P P.E.T - CHENNAI - 9894635962 |  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

D.ELE.ED 1 - TEXT BOOKS (STATE BOARD-TAMIL NADU) FROM 2009

 1. D.T.ED YEAR 1 ENGLISH | Download
 2. D.T.ED YEAR 1 FACILITATING AND ENHANCING LEARNING TM | Download
 3. D.T.ED YEAR 1 LEARNING CHILD TM | Download
 4. D.T.ED YEAR 1 MATHEMATICS TM | Download
 5. D.T.ED YEAR 1 PRACTICUM TM | Download
 6. D.T.ED YEAR 1 SCIENCE TM | Download
 7. D.T.ED YEAR 1 SOCIAL SCIENCE TM | Download
 8. D.T.ED YEAR 1 TAMIL | Download
 9. D.T.ED YEAR 2 ENGLISH | Download
 10. D.T.ED YEAR 2 FACILITATING AND ENHANCING LEARNING TM | Download
 11. D.T.ED YEAR 2 INDIAN EDUCATION SYSTEM TM | Download
 12. D.T.ED YEAR 2 MATHEMATICS TM | Download
 13. D.T.ED YEAR 2 PRACTICUM TM | Download
 14. D.T.ED YEAR 2 SCIENCE TM | Download
 15. D.T.ED YEAR 2 SOCIAL SCIENCE TM | Download
 16. D.T.ED YEAR 2 TAMIL | Download
 17. TNEU BED LEARNING AND TEACHING TM | Download
 18. TNEU BED CHILDHOOD AND GROWING UP TM | Download
 19. TNEU BED CURRICULAM TM | Download
 20. TNEU BED GENDER, SCHOOL AND SOCIETY EM | Download
 21. TNEU BED GENDER, SCHOOL AND SOCIETY TM | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

BANK OF INDIA RECRUITMENT 2018 | பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியில் 158 அதிகாரிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மே 5-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

பேங்க் ஆஃப் இந்தியா வங்கிப் பணி | மத்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. தேவையான தகுதி இப்பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு, எம்.பி.ஏ. பட்டம் அல்லது மேலாண்மையில் பட்டயம் அவசியம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண் போதும். சி.ஏ., கம்பெனி செக்ரட்டரிஷிப், ஐ.சி.டபிள்யு.ஏ. முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். வயது குறைந்தபட்சம் 21 ஆகவும் அதிகபட்சம் 30 ஆகவும் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். என்ன கேட்பார்கள்? எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தெரிவுசெய்யப்படுவர். ஆன்லைன்வழியிலான எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், வங்கித் துறை சம்பந்தப்பட்ட பொது அறிவு, நிதி மேலாண்மை ஆகிய 3 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். இதற்கு மதிப்பெண் 150. தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். ஆங்கிலப் பிரிவில், நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றாலே போதும். அதில் எடுக்கும் மதிப்பெண் மெரிட் பட்டியலுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதற்கு 100 மதிப்பெண். எழுத்துத் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் 80:20 என்ற விகிதாச்சாரத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். உரிய கல்வித் தகுதியும் வயதும் உடைய பட்டதாரிகள் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையதளத்தைப் (www.bankofindia.co.in ) பயன்படுத்தி மே 5-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNEA 2018 | இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகம் பொறியியல் படிப்புக்கு மே 3-ம் தேதி ஆன்லைன் பதிவு தொடக்கம் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்   நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் பேசுகிறார் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். உடன் (இடமிருந்து) தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன், உயர் கல்வித்துறை முதன்மை செயலர் சுனில் பாலிவால், பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ். பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு மே 3-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு நவம்பர் 29-ம் தேதி வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து ஆன்லைன் பதிவு மே 3-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடையும். ஆன்லைன் கலந்தாய்வுக்கு முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பு ஜுன் முதல் வாரத்திலும் ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்திலும் தொடங்கும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

7-வது ஊதியக்குழுவில் முரண்பாடுகளை நீக்கக்கோரி டி.பி.ஐ. வளாகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை

7-வது ஊதியக்குழுவில் முரண்பாடுகளை நீக்கக்கோரி டி.பி.ஐ. வளாகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை கைது செய்யப்பட்ட பின்பும் தொடர்ந்து போராட்டம் போராட்டத்தில் கைதான இடைநிலை ஆசிரியர்கள் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி. சென்னை, ஏப்.24- 7-வது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி சென்னை டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். டி.பி.ஐ வளாகம் 7-வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் 23-ந்தேதி(அதாவது நேற்று) முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி போராட்டத்தில் ஈடுபட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் நேற்று காலை டி.பி.ஐ. முன்பு குவியத்தொடங்கினர். இதனால் டி.பி.ஐ. முன்பும், உள்ளேயும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கைது டி.பி.ஐ. வளாகம் நோக்கி முன்னேறிய இடைநிலை ஆசிரியர்களை கலைந்து செல்லும்படி போலீசார் தெரிவித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஏராளமானோர் பெண்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்தனர். அரசு முயற்சி எடுக்கவில்லை இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய அரசியலமைப்பு சட்டமும், சுப்ரீம் கோர்ட்டும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. ஆனாலும் இந்த ஊதிய முரண்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்படுவது இடைநிலை ஆசிரியர்கள் தான். இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு 8 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். அப்போது 7-வது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகள் சரிசெய்ய பரிந்துரை செய்யப்படும் என்று அரசு எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு கொடுத்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் இதுவரை அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை நியாயமான போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். இரவு வரையிலும் போராட்டம் இதற்கிடையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க பிரதிநிதிகள் தலைமை செயலகத்துக்கு சென்று அங்குள்ள பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, ராஜரத்தினம் ஸ்டேடியத்திலேயே உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஆகாத அவர்கள் நேற்று இரவு வரையிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் | தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. “தற்போதைய நடைமுறையில், ஆசிரியர் காலியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் ஒப்புதல் பெற்று அதை இறுதிசெய்வதற்கு அதிக காலம் ஆகிவிடுகிறது. அரசின் புதிய முறை மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பமுடியும்” என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

BANK OF BARODA RECRUITMENT 2018 | பரோடா வங்கியில் சீனியர் ரிலேசன்ஷிப் மேலாளர் பணி. விண்ணப்பிக்க கடைசி நாள் 6-5-2018-ந் தேதி

பிரபல வங்கிகளில் 582 அதிகாரி பணிகள் 2 முன்னணி வங்கிகளில் அதிகாரி பணிக்கு 582 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி. வெளிநாடுகளிலும் கிளைகளைக் கொண்ட பிரபல வங்கியான இதில் தற்போது எச்.ஆர். தரத்திலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர் பணிக்கு 375 இடங்களும், டெரிட்டோரி ஹெட் பணிக்கு 37 இடங்களும், குரூப் ஹெட் பணிக்கு 6 இடங்களும் உள்ளன. மற்றும் சில பிரிவில் மேலாளர் தரத்திலான பணிகள் உள்ளன. மொத்தம் 424 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு பிரிவு பணிகளிலும் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா, அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ, கோவை, இந்தூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இந்த பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இனி இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை நீக்கம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, கூட்டுறவு சங்க தேர்தலுக்கு விதிக்கப் பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 18 ஆயிரத்து 435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. மதுரை ஐகோர்ட்டு தடை இருகட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நூலகங்களுக்கு கொள்முதல் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க ஏப்.27 வரை காலஅவகாசம் நூலகத்துறை இயக்குநர் அறிவிப்பு

நூலகங்களுக்கு கொள்முதல் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க ஏப்.27 வரை காலஅவகாசம் நூலகத்துறை இயக்குநர் அறிவிப்பு | நூலகங்களுக்கு புத்தகங் கள் வாங்கும் வகையில் பதிப்பாளர்கள் மற்றும் புத் தக விற்பனையாளர்கள் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க ஏப்ரல் 27-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள் ளது. இதுதொடர்பாக பொது நூலக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது நூலக இயக்கத்தின்கீழ் செயல்படும் பொது நூலகங்களுக்கு 2016 மற்றும் 2017-ம் ஆண்டு பதிப்பு தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்கு மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 19-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பதிப்பகத்தார் மற்றும் புத்தக விற்பனையாளர்களின் வேண்டுகோளை ஏற்று, மாதிரி நூல்களை பொது நூலக இயக்ககத்தில் சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அறிவிப்பு

தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அறிவிப்பு | தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள், 500-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நடக்கிறது. ஆனால், தனியார் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். இடங்களை அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் விருப்பப்படி நிரப்பிக்கொள்ளலாம். இந்நிலையில், தனியார் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு (2018-19) முதல் பி.எட். மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், செயலாளர்களுக்கு பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.ரவீந்திரநாத் தாகூர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், தனியார் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்த 2018-19 கல்வியாண்டு முதல் கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. தனியார் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கை பணிகளுக்காக கல்லூரி முதல்வர், 2 மூத்த பேராசிரியர்கள் கொண்ட மாணவர் சேர்க்கை குழுவை அமைக்க வேண்டும். பி.எட். விண்ணப்பம் வழங்குவது, தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் மெரிட் பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை இந்த குழு செய்ய வேண்டும். பி.எட். மாணவர் சேர்க்கை தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி  (மதிப்பெண், இட ஒதுக்கீடு) மட்டுமே மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு அதன் முழு விவரங்களை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC - COUNSELLING FOR THE POST CCSE-II 2014-16 (INTERVIEW POST) PHASE-II | இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு 1:5 என்ற விகிதாச்சாரத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2014 – 2016 - இல் அடங்கிய நேர்முகத் தேர்வு உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனத்திற்கு தகுதியான நபர்களை தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 30.04.2015-ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 21.08.2016 அன்று நடைபெற்றது. நேர்காணல் 22.01.2018 முதல் 19.02.2018 வரை நடைபெற்றது. அதன்பின்னர் 1094 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு முதற்கட்ட கலந்தாய்வு 19.03.2018 முதல் 03.04.2018 வரை நடைபெற்றது. முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த பின்னர் நிரப்பப்படாமல் எஞ்சியுள்ள 88 காலிப்பணியிடங்களில் 45 பதவிகளுக்கு மட்டும் தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25.04.2018 ல் நடத்த தேர்வணையம் முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு 1:5 என்ற விகிதாச்சாரத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள்முறையே அழைப்புக்கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனித்தனியே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்புக்குறிப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்கலந்தாய்விற்கு வருகைதரத் தவறும்பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன் பின்னர் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டவர்களை தவிர ஏற்கனவே முதல்கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு அடிப்படை சம்பளவிகிதம் 9300/- ல் ஏதேனும் ஒரு பதவியை தேர்வு செய்திருந்து தற்போது இடம் பெற்றுள்ள பதவி காலியிடங்களில் ஏதேனும் ஒன்றை தெரிந்தெடுக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் பங்குகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தரவரிசை மற்றும் பதவிகளுக்கான கல்வித்தகுதி காலிப்பணியிடங்களின் அடிப்படையில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். 1:5விகிதாச்சாரத்தில் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளமையால் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் தெரிவு பெறும் வாய்ப்பு இல்லை என அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் / செயலாளர் (பொ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC | சான்றிதழை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யும் புதிய முறை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வில் அறிமுகமாகிறது.

சான்றிதழை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யும் புதிய முறை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வில் அறிமுகமாகிறது | அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற் றம் செய்யும் புதிய முறையை குருப்-2-ஏ தேர்வில் டிஎன்பிஎஸ்சி முதல்முறையாக அறிமுகப்படுத்துகிறது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தனது பல்வேறு செயல்பாடுகளில் துரித மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு, தகவல் தொழில்நுட்ப உதவியுடன், விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போதுள்ள நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்காக தரவரிசைப் படி தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 2 முறை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகம் வந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், தேர்வர்களுக்கு ஏற்படும் பண விரயம் மற்றும் காலவிரயத்தை வெகுவாகக் குறைக் கும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும், தங்களது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள அனைத்துத் தகுதிகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய அசல் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யும் முறையை தேர்வாணையம் முதல்முறையாக அறிமுகப்படுத்துகிறது. இந்த நடைமுறை வருகிற 23-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கவிருக்கிற ஒருங்கிணைந்த குரூப்-2-ஏ (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இருந்து தொடங்குகிறது. அரசு இ-சேவை மையங்கள் எனவே, குரூப்-2-ஏ சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், மே 4-ம் தேதிக்குள் தங்களது அசல் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு சான்றிதழை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் தகுதி மற்றும் தரவரிசையின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு தெரிந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மட்டும் ஒருமுறை தேர்வாணைய அலுவலகத்துக்கு அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்தால் போதுமானது. இதனால், விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் வெகுவாகக் குறையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மருந்து தயாரிப்பு உதவியாளர் பணிக்கு மே 21 வரை விண்ணப்பிக்க அவகாசம் சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

மருந்து தயாரிப்பு உதவியாளர் பணிக்கு மே 21 வரை விண்ணப்பிக்க அவகாசம் சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல் | அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் மருந்து தயாரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் மருந்து தயாரிப்பு உதவியாளர் பணியில் 25 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 35 ஆகவும், பிசி, பிசி (முஸ்லிம்), எம்பிசி வகுப்பினருக்கு 33 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதச் சம்பளம் ரூ.16,600. இதற்கான விண்ணப்பங்கள் “கண்காணிப்பாளர், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை, அரும்பாக்கம், சென்னை - 600106” என்ற முகவரியில் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களை மே 7-ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 27-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்க கடைசி நாள் மே 21-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எம்.ஃபில், பிஎச்டி படிப்புகளில் சேர மே 18 வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு

எம்.ஃபில், பிஎச்டி படிப்புகளில் சேர மே 18 வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு | எம்.ஃபில், பிஎச்டி படிப்புகளில் சேர மே 18 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது. இதுதொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) கே.எம்.சுப்பிரமணியம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் யுஜிசி அனுமதியுடன் நேரடி முறையில் முழுநேர மற்றும் பகுதிநேர எம்.ஃபில், பிஎச்டி படிப்புகளை நடத்தி வருகிறது. இதில், தமிழ், ஆங்கிலம், மேலாண்மை, இயற்பியல், வேதியியல், விலங்கியல், சமூக வியல், கணினி அறிவியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உளவியல், கல்வியியல், மின்னணு ஊடகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மற்றும் விளக்க வுரையை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 18-ம் தேதி ஆகும். யுஜிசி அங்கீகாரம் யுஜிசி அங்கீகாரத்தை பொறுத்தவரையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமானது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீ கார கவுன்சிலின் (நாக்) தர மதிப்பீட்டைப் பெறாமல் 2020 வரை தொலைநிலை மற்றும் திறந்தநிலை கல்விமுறையில் படிப்புகளை வழங்குவதற்கு யுஜிசி அங்கீகாரம் அளித்துள்ளது. எனவே, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சான்றிதழ், டிப்ளமோ, பட்டம், முதுநிலை பட்டம், எம்.ஃபில், பிஎச்டி படிப்புகள் அனைத்தும் யுஜிசி-யின் அங்கீகாரம் பெற்றவை ஆகும். இவ்வாறு சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DSE 01.08 படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதுகலை / பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- தெளிவுரைகள்

பள்ளிக்கல்வி-அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளிகளில் 01.08 படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதுகலை / பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- தெளிவுரைகள் வழங்குவது சார்பு | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 SOCIAL SCIENCE EM MODEL QUESTION PAPERS MARCH 2018 - T.S.SARAVANAN

CLASS 10 SOCIAL SCIENCE EM MODEL QUESTION PAPERS MARCH 2018 - T.S.SARAVANAN S/O P.SIVABALAN (Late) B.Sc(Chem), B.Ed., M.A (Eng.Lit), M.Phil(Eng.Lit), B.A(His) 17/1-239/72 A- 5,KARUMALAIKOODAL, NEHRU NAGAR, METTUR DAM (R.S), SALEM (D.T), - 636402 EMAIL; sharavananvepp@gmail.com For conversation: 8675509227 | DOWNLOAD 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 SCIENCE TM MARCH 2018 PUBLIC EXAMINATION 2017 -18 SCIENCE - KEY ANSWERS PREPARED BY I.CHINNAPPARAJ,CLASS 10 SCIENCE TM MARCH 2018 PUBLIC EXAMINATION 2017 -18 SCIENCE - KEY ANSWERS PREPARED BY I.CHINNAPPARAJ, MSC.,M.PHIL.,B.ED., B.T-ASST – SCIENCE DE BRITTO HR SEC SCHOOL DEVAKOTTAI – 630303. SIVAGANGAI DISTRICT. | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 SCIENCE EM PUBLIC EXAMINATION 2017 -18 SCIENCE - KEY ANSWERS PREPARED BY M.G RAYMOND & JOHNSON PRABHU,


CLASS 10 SCIENCE EM PUBLIC EXAMINATION 2017 -18 SCIENCE - KEY ANSWERS PREPARED BY M.G RAYMOND & JOHNSON PRABHU, ST.PAUL'S MAT. HR. SEC. SCHOOL, BLOCK-4, NEYVELI. 9442980841 /9629705161 | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

NEET - 2018 - Admit Card | மே 6ல் நடைபெறும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு.

NEET - 2018 -  Admit Card | மே 6ல் நடைபெறும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு |  Admit Card Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

www.tndte.gov.in | தட்டச்சு தேர்வு முடிவுகள் நாளை (18.04.2018) வெளியாகிறது

தட்டச்சு தேர்வு முடிவுகள் நாளை (18.04.2018) வெளியாகிறது | தொழில்நுட்ப வணிகவியல் தட்டச்சு (ஆங்கிலம் மற்றும் தமிழ்) தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவு நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. முடிவை இணையதளத்தில் ( www.tndte.gov.in ) காணலாம். இந்த தகவலை தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு | போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் வேலைக்கு ஆட்களை சேர்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதியன்று தமிழகம் முழுவதும் எழுத்து தேர்வு நடந்தது. 2.88 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு எழுதியவர்கள் வாங்கிய மதிப்பெண் பட்டியல் முன்தினம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் | தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:- தமிழகத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகஅளவில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளனர். இந்திய அளவில் தமிழகத்தில்தான் எம்.பில் பட்டம் பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் 10-வது இடத்தில் உள்ளது. பொறியியல் கல்வியில் இந்திய அளவில் 8-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் அரசு கலைக்கல்லூரி கல்வியில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. 2018-19-ம் நிதிஆண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறைக்கு கடந்த ஆண்டை விட ரூ.940 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர்கள் தமிழகத்தில் கல்லூரிகளுக்கு 862 வகுப்பறைகள் மற்றும் 178 ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது ரூ.210 கோடி கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது முதல்கட்டமாக 1,863 கவுரவ பேராசிரியர்களும், இரண்டாம் கட்டமாக 1,661 கவுரவ பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உயர்கல்வித்துறையில் 2,740 உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.