உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

எம்.ஃபில், பிஎச்டி படிப்புகளில் சேர மே 18 வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு

எம்.ஃபில், பிஎச்டி படிப்புகளில் சேர மே 18 வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு | எம்.ஃபில், பிஎச்டி படிப்புகளில் சேர மே 18 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது. இதுதொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) கே.எம்.சுப்பிரமணியம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் யுஜிசி அனுமதியுடன் நேரடி முறையில் முழுநேர மற்றும் பகுதிநேர எம்.ஃபில், பிஎச்டி படிப்புகளை நடத்தி வருகிறது. இதில், தமிழ், ஆங்கிலம், மேலாண்மை, இயற்பியல், வேதியியல், விலங்கியல், சமூக வியல், கணினி அறிவியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உளவியல், கல்வியியல், மின்னணு ஊடகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மற்றும் விளக்க வுரையை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 18-ம் தேதி ஆகும். யுஜிசி அங்கீகாரம் யுஜிசி அங்கீகாரத்தை பொறுத்தவரையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமானது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீ கார கவுன்சிலின் (நாக்) தர மதிப்பீட்டைப் பெறாமல் 2020 வரை தொலைநிலை மற்றும் திறந்தநிலை கல்விமுறையில் படிப்புகளை வழங்குவதற்கு யுஜிசி அங்கீகாரம் அளித்துள்ளது. எனவே, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சான்றிதழ், டிப்ளமோ, பட்டம், முதுநிலை பட்டம், எம்.ஃபில், பிஎச்டி படிப்புகள் அனைத்தும் யுஜிசி-யின் அங்கீகாரம் பெற்றவை ஆகும். இவ்வாறு சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.