உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

மருந்து தயாரிப்பு உதவியாளர் பணிக்கு மே 21 வரை விண்ணப்பிக்க அவகாசம் சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

மருந்து தயாரிப்பு உதவியாளர் பணிக்கு மே 21 வரை விண்ணப்பிக்க அவகாசம் சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல் | அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் மருந்து தயாரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் மருந்து தயாரிப்பு உதவியாளர் பணியில் 25 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 35 ஆகவும், பிசி, பிசி (முஸ்லிம்), எம்பிசி வகுப்பினருக்கு 33 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதச் சம்பளம் ரூ.16,600. இதற்கான விண்ணப்பங்கள் “கண்காணிப்பாளர், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை, அரும்பாக்கம், சென்னை - 600106” என்ற முகவரியில் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களை மே 7-ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 27-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்க கடைசி நாள் மே 21-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.