உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

நூலகங்களுக்கு கொள்முதல் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க ஏப்.27 வரை காலஅவகாசம் நூலகத்துறை இயக்குநர் அறிவிப்பு

நூலகங்களுக்கு கொள்முதல் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க ஏப்.27 வரை காலஅவகாசம் நூலகத்துறை இயக்குநர் அறிவிப்பு | நூலகங்களுக்கு புத்தகங் கள் வாங்கும் வகையில் பதிப்பாளர்கள் மற்றும் புத் தக விற்பனையாளர்கள் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க ஏப்ரல் 27-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள் ளது. இதுதொடர்பாக பொது நூலக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது நூலக இயக்கத்தின்கீழ் செயல்படும் பொது நூலகங்களுக்கு 2016 மற்றும் 2017-ம் ஆண்டு பதிப்பு தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்கு மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 19-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பதிப்பகத்தார் மற்றும் புத்தக விற்பனையாளர்களின் வேண்டுகோளை ஏற்று, மாதிரி நூல்களை பொது நூலக இயக்ககத்தில் சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.