உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி உண்ணாவிரதம் இடைநிலை ஆசிரியர் போராட்டம் தீவிரம் 50 பேர் மயக்கம்; மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி உண்ணாவிரதம் இடைநிலை ஆசிரியர் போராட்டம் தீவிரம் 50 பேர் மயக்கம்; மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு ஊதிய முரண்பாட்டை களையக் கோரி யில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. உடல் சோர்வு மற்றும் மயக்கம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர்  மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 1.6.2009-க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்குப் பின்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய விகிதத்தில் பெரிய அளவில் வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம வேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஊதிய முரண்பாட்டை சரிசெய் யக் கோரி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடந்த திங்கள்கிழமை குடும்பத்தோடு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத் தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.