உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNEA 2018 | இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகம் பொறியியல் படிப்புக்கு மே 3-ம் தேதி ஆன்லைன் பதிவு தொடக்கம் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்   நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் பேசுகிறார் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். உடன் (இடமிருந்து) தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன், உயர் கல்வித்துறை முதன்மை செயலர் சுனில் பாலிவால், பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ். பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு மே 3-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு நவம்பர் 29-ம் தேதி வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து ஆன்லைன் பதிவு மே 3-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடையும். ஆன்லைன் கலந்தாய்வுக்கு முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பு ஜுன் முதல் வாரத்திலும் ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்திலும் தொடங்கும்.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.