தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 20-ந் தேதி வெளியீடு

ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத்தேர்வுகளான தட்டச்சு (ஆங்கிலம் மற்றும் தமிழ்), சுருக்கெழுத்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்) மற்றும் கணக்கியல் ஆகிய தேர்வுகளின் முடிவு வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் வெளியிடப்படும். பயிலகம் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.