Labels

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தகுதியுள்ள தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதி முதல் மார்ச் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித் தேர்வர்கள் ஜனவரி 7 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு சேவை தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Read More News | Download

Comments