உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தொடர்ந்து மாணவிகளே முதலிடம் பெற்று சாதனை!.

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை காலை வெளியானது. இந்தாண்டும் மாணவிகளே முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 17-வது மக்களவைத் தேர்தல் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வேகமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனை 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த  9 லட்சத்து 59,618 மாணவ, மாணவிகளும், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்களும் எழுதினர்.  இதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த இடங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் வெளியானது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் 93.3 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தொடரும் மாணவிகள் சாதனை: கடந்த பல வருடங்களாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ அரசு தேர்வுகளில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.5% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள். இந்த ஆண்டு தேர்வில் அது 93.3% அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 96.4% மாணவிகள் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த ஆண்டு 97% மாணவிகள் தேர்ச்சி பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள்...  
திருப்பூர் - 98.53%
ராமநாதபுரம் - 98.48%
நாமக்கல் - 98.45%

பாட வாரியான தேர்ச்சி விகிதம்: 
தமிழ் - 96.12%
ஆங்கிலம் - 97.35%
கணிதம்  - 96.46%
அறிவியல் - 98.56%
சமூக அறிவியல் - 97.07%

பள்ளிகள் தேர்ச்சி விகிதம்: 
அரசு பள்ளிகள் - 92.48%
அரசு உதவிபெறும் பள்ளிகள் - 94.53%
மெட்ரிக் பள்ளிகள் - 99.05%

குறைந்த அளவில் தேர்ச்சி பெற்ற கடைசி 5 மாவட்டங்கள்: 
கடலூர் - 92.86%
காஞ்சிபுரம் - 92.45%
திண்டுக்கல் - 92.40%
நாகை - 90.41%
வேலூர் - 89.98%

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளில் 92.48% பேரும், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளில் 99.05% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறுகிறது. மே 2 முதல் தங்கள் பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 6,100 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Read More News | Download

1 comment:

  1. In coming years Please Furnish private candidate pass percentage. It will help the volunteers or Tuition centers to support more private candidates to complete their 10th STD exam.

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.