உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் ஜோதி வெங்கடேஸ் வரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வி ஆண்டில் (2019-2020) அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் மாணவர் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 19 (இன்று) முதல் 28-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உள்பட) வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். அவர்கள் சுயசான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சென்னையில் திருவல் லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் குமாரபாளையம், ஓரத்தநாடு, புதுக்கோட்டை, கோவை, வேலூர் காந்திநகர் ஆகிய இடங் களில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகள், திண்டுக்கல் காந்திகிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் பேர்லாண்ட்ஸ்  சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி, அன்னம்மாள் கல்வியி யல் கல்லூரி பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி, திருவட் டாறு ஆத்தூர் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘‘செயலாளர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி. சென்னை 600 005’’ என்ற முகவரிக்கு ஜூலை 29-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பிஎட் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டி நெறி முறைகள் www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி களில் பிஎட் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2,040 இடங்கள் உள்ளன. இவை கலந் தாய்வு மூலம் நிரப்பப்படும். கலந்தாய்வின்போது மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரியை தேர்வுசெய்துகொள்ளலாம். கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் நடத்தப்படும்.
Read More News | Download

1 comment:

  1. Is Studying b.ed after B.E is eligible to write TET or not?? Can anyone clarify please..

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.