CLASS 12 MONTHLY SYLLABUS 2019-20 | மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கான ( PLUS TWO-12TH ) மாதாந்திர பாடத் திட்டத்தை பள்ளிககல்வித்துறை வெளியிட்டுள்ளது.
- TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

CLASS 12 MONTHLY SYLLABUS 2019-20 | மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கான ( PLUS TWO-12TH ) மாதாந்திர பாடத் திட்டத்தை பள்ளிககல்வித்துறை வெளியிட்டுள்ளது.
CLASS 11 MONTHLY SYLLABUS 2019-20 | மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான ( PLUS ONE-11TH ) மாதாந்திர பாடத் திட்டத்தை பள்ளிககல்வித்துறை வெளியிட்டுள்ளது.
CLASS 11 MONTHLY SYLLABUS 2019-20 | மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான ( PLUS ONE-11TH ) மாதாந்திர பாடத் திட்டத்தை பள்ளிககல்வித்துறை வெளியிட்டுள்ளது.
CLASS 10 MONTHLY SYLLABUS 2019-20 | பத்தாம் வகுப்பிற்கான ( SSLC-10TH ) மாதாந்திர பாடத் திட்டத்தை பள்ளிககல்வித்துறை வெளியிட்டுள்ளது.
CLASS 10 MONTHLY SYLLABUS 2019-20 | பத்தாம் வகுப்பிற்கான ( SSLC-10TH ) மாதாந்திர பாடத் திட்டத்தை பள்ளிககல்வித்துறை வெளியிட்டுள்ளது.
PG SENIORITY LIST | மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 21,977 முதுகலை ஆசிரியர்களின் SENIORITY LIST பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
PG SENIORITY LIST | மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 21,977 முதுகலை ஆசிரியர்களின் SENIORITY LIST பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
TRB PG 2018-2019 SYLLABUS முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கான பாடத்திட்டம் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
- TRB - DIRECT RECRUITMENT FOR THE POST OF POST GRADUATE ASSISTANTS & PHYSICAL EDUCATION DIRECTORS GRADE-I - 2018-2019 SYLLABUS | TRB PG 2018-2019 SYLLABUS முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கான பாடத்திட்டம் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது | Download
TRB COMPUTER SCIENCE TENTATIVE ANSWER KEY DOWNLOAD | கணினி பயிற்றுநர் தேர்விற்கான தற்காலிக விடை குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது
TRB COMPUTER SCIENCE TENTATIVE ANSWER KEY DOWNLOAD | கணினி பயிற்றுநர் தேர்விற்கான தற்காலிக விடை குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது
CLASS 12 ACCOUNTANCY TM 1 TO 10 ONE MARK QUESTIONS AND ANSWER - STUDY MATERIAL PREPARED BY G.PRAKASH
CLASS 12 ACCOUNTANCY TM 1 TO 10 ONE MARK QUESTIONS AND ANSWER - STUDY MATERIAL PREPARED BY G.PRAKASH
CLASS 12 COMMERCE TM 1 TO 4 MODEL QUESTION PAPER - G.PRAKASH. M.COM. M.PHIL. B.ED. D.TED.9488270034 GUGAI HR.SEC.SCHOOL - SALEM 6 | DOWNLOAD
CLASS 12 COMMERCE TM 1 TO 4 MODEL QUESTION PAPER - G.PRAKASH. M.COM. M.PHIL. B.ED. D.TED.9488270034 GUGAI HR.SEC.SCHOOL - SALEM 6 | DOWNLOAD
மருத்துவ தேர்வு வாரிய விதிகளில் திருத்தம்: மருந்தாளுனர் பணிக்கு எழுத்து தேர்வு அரசாணை வெளியீடு
தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வு மூலம் நியமிக்கப்படும் பணியிடங்கள் தவிர, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மற்ற பணியிடங்களுக்கு ஊழியர்களை நியமிக்க மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், 353 மருந்தாளுனர்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பாணையை மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, பி.பார்ம் படித்து தமிழ்நாடு மருந்தக கவுன்சிலில் கடந்த மார்ச் 1-ந் தேதிக்கு முன்பு பதிவு செய்தவர்களை தகுதியாகக்கொண்டு, ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தநிலையில் மருத்துவப்பணிகள் தேர்வு வாரியத்தலைவர் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘353 காலிப்பணியிடங்களுக்கு 23 ஆயிரத்து 8 விண்ணப்பங்கள் வந்துள்ளன. எனவே, தகுதியுள்ளோர் பட்டியலை தயாரிக்க ‘வெயிட்டேஜ்’ முறையை பின்பற்றினால் விண்ணப்பதாரர்களிடையே தெளிவின்மையும், சந்தேகமும் எழும்.
மேலும் சில கல்வி நிறுவனங்களில் பட்டயம் மற்றும் பட்டப்படிப்புக்கான அதிகபட்ச மதிப்பெண் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. எனவே மருந்தாளுனர் பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். அதற்கேற்ப மருத்துவப்பணிகள் தேர்வு வாரிய நடைமுறை விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
அவரது முன்மொழிவை அரசு பரிசீலித்தது. மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வை நடத்துவதற்கு இந்த ஒருமுறை மட்டும் விதிகளை தளர்த்துவதற்கு மருத்துவப்பணிகள் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
CLASS 10-SMART-ENGLISH-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
CLASS 10-SMART-ENGLISH-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
CLASS 10-MATHEMATICS-EM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
CLASS 10-MATHEMATICS-EM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
CLASS 10-MATHEMATICS-TM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
CLASS 10-MATHEMATICS-TM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
CLASS 10-SCIENCE-EM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
CLASS 10-SCIENCE-EM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
CICT RECRUITMENT 2019 | CICT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PROFESSOR, READER, LECTURER உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 13 . விளம்பர அறிவிப்பு நாள் : 17.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.
- CICT RECRUITMENT 2019 | CICT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : PROFESSOR, READER, LECTURER உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 13 .
- விளம்பர அறிவிப்பு நாள் : 17.07.2019.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.
- இணைய முகவரி : www.cict.in
TNPL RECRUITMENT 2019 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : MANAGEMENT TRAINEE . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8 . விளம்பர அறிவிப்பு நாள் : 18.07.2019 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.08.2019 .
- TNPL RECRUITMENT 2019 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : MANAGEMENT TRAINEE .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8 .
- விளம்பர அறிவிப்பு நாள் : 18.07.2019 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.08.2019 .
B.E., / B.Tech., பட்டப்படிப்பு மாணாக்கர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு. இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 24.07.2019
B.E., / B.Tech., பட்டப்படிப்பு மாணாக்கர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு.இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 24.07.2019.
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ASST TOURIST OFFICER GRADE II உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 42 . விளம்பர அறிவிப்பு நாள் : 16.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.08.2019.
- TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : ASST TOURIST OFFICER GRADE II உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 42 .
- விளம்பர அறிவிப்பு நாள் : 16.07.2019.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.08.2019.
- தேர்வு நடைபெற உள்ள நாள் : 29.09.2019 .
- இணைய முகவரி : http://www.tnpsc.gov.in/latest-notification.html
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு சட்டப்பேரவையில் துணை முதல்வர் அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக் கான பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், ஓய்வூதியர்களுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
DGE TIME TABLE MARCH 2020 - SSLC - PLUS ONE - PLUS TWO PUBLIC EXAM TIME TABLE (SINGLE PAGE)
DGE TIME TABLE MARCH 2020 - SSLC - PLUS ONE - PLUS TWO PUBLIC EXAM TIME TABLE SINGLE PAGE
DGE TIME TABLE MARCH 2020 - மார்ச் / ஏப்ரல் 2020, இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாட்கள் குறித்த அறிவிப்பினை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
DGE TIME TABLE MARCH 2020 - SSLC - PLUS ONE - PLUS TWO PUBLIC EXAM TIME TABLE TABLE MARCH 2020 - மார்ச் / ஏப்ரல் 2020, இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாட்கள் குறித்த அறிவிப்பினை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
DSE DR RADHAKRISHNAN AWARD - பள்ளிக்கல்வித்துறையில் 2018-19 ஆம் கல்வியாண்டில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்குவதற்கான கருத்துருக்கள் கோரப்பட்டுள்ளது
DSE DR RADHAKRISHNAN AWARD _ பள்ளிக்கல்வித்துறையில் 2018-19 ஆம் கல்வியாண்டில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்குவதற்கான கருத்துருக்கள் கோரப்பட்டுள்ளது - 2018-19ஆம் கல்வியாண்டில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது 05.09.2019 அன்று வழங்கிட ஏதுவாக ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோருதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6. ந.க.எண். 39999/8/21/2019, நாள்.17.07.2019.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் ஜோதி வெங்கடேஸ் வரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
நடப்பு கல்வி ஆண்டில் (2019-2020) அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் மாணவர் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 19 (இன்று) முதல் 28-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உள்பட) வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். அவர்கள் சுயசான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை சென்னையில் திருவல் லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் குமாரபாளையம், ஓரத்தநாடு, புதுக்கோட்டை, கோவை, வேலூர் காந்திநகர் ஆகிய இடங் களில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகள், திண்டுக்கல் காந்திகிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் பேர்லாண்ட்ஸ் சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி, அன்னம்மாள் கல்வியி யல் கல்லூரி பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி, திருவட் டாறு ஆத்தூர் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘‘செயலாளர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி. சென்னை 600 005’’ என்ற முகவரிக்கு ஜூலை 29-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பிஎட் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டி நெறி முறைகள் www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி களில் பிஎட் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2,040 இடங்கள் உள்ளன. இவை கலந் தாய்வு மூலம் நிரப்பப்படும். கலந்தாய்வின்போது மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரியை தேர்வுசெய்துகொள்ளலாம். கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் நடத்தப்படும்.
CLASS 12 COMMERCE TM LESSON 1 TO 4 STUDY MATERIAL PREPARED BY G.PRAKASH
CLASS 12 COMMERCE TM LESSON 1 TO 4 STUDY MATERIAL PREPARED BY G.PRAKASH M.COM. M.PHIL. B.ED. D.TED GUGAI HR.SEC. SCHOOL. SALEM -6 CONTACT - 9488270034. | DOWNLOAD
CLASS 11 BIOLOGY - ZOOLOGY TM VOLUME-I STUDY MATERIALS - REVISED 2019 - P.SENGUTTUVAN - G.AROCKIAM
CLASS 11 BIOLOGY - ZOOLOGY TM VOLUME-I STUDY MATERIALS - REVISED 2019 - P.SENGUTTUVAN - G.AROCKIAM
CLASS 12 BIO ZOOLOGY TM CHAPTER 4 மரபுக்கடத்தல் கொள்கைகள் - மாறுபாடுகள் STUDY MATERIALS - P.SENGUTTUVAN M.SC., M.ED.,M.PHIL.& G.AROCKIAM. M.SC., B.ED.,M.PHIL. TNHSPGTA – DHARMAPURI. | DOWNLOAD
CLASS 12 BIO ZOOLOGY TM CHAPTER 4 மரபுக்கடத்தல் கொள்கைகள் - மாறுபாடுகள் STUDY MATERIALS - P.SENGUTTUVAN M.SC., M.ED.,M.PHIL.& G.AROCKIAM. M.SC., B.ED.,M.PHIL. TNHSPGTA –DHARMAPURI. | DOWNLOAD
TRB PG TAMIL STUDY MATERIALS DOWNLOAD
TRB PG TAMIL STUDY MATERIALS DOWNLOAD
3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. | CLICK
TNPSC RESULT PUBLISHED | 31 போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வரலாற்றுச் சாதனை.
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2018ம் ஆண்டில் பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான 31 அறிவிக்கைகளை வெளியிட்டு அனைத்திற்கும் தேர்வுகள் நடத்தி மிகக் குறுகிய நாட்களில் முடிவுகளை வெளியிட்டு மிகப் பெரும் சாதனை படைத்துள்ளது.
மேலும் 2019ம் ஆண்டில் தற்போது வரை 29 போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அவற்றில் 24 (23 நேர்முகத் தேர்வுடன் கூடிய பதவிகள் மற்றும் 1 நேர்முகத்தேர்வு அல்லாத எழுத்துத் தேர்வு மட்டுமே உள்ள பதவிகள் அடங்கும்) பதவிகளுக்கான தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள 23 நேர்முகத்தேர்வுடன் கூடிய பதவிகளில் 14 பதவிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 தேர்வுகளுக்கான நேர்காணல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதுவரை 2019ல் இதுநாள் வரை 18 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு அவற்றில் 14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் 5 தேர்வுகளுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது.
குறிப்பாக 15.07.2019 அன்று மட்டும் கடந்த மே மாதம் வரை நடத்தப்பட்டுள்ள 12 போட்டித் தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளமை ஒரு வரலாற்றுச் சாதனையாகும். (இணைப்பில் உள்ள பட்டியலைக் காண்க)
இதன் மூலம் தேர்வாணையம் மிகக் குறுகிய கால இடைவெளியில் அதிக அளவிலான அறிவிக்கைகளை வெளியிட்டு அதற்கான போட்டித் தேர்வுகளை திறம்பட நடத்தி, மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் மிகக் குறுகிய காலத்தில் மிக நேர்த்தியாகச் செயல்பட்டு உடனுக்குடன் முடிவுகளை வெளியிட்டுவருவது தேர்வர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இரா. சுதன்
தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்
15.07.2019
மருத்துவ மேற்படிப்புக்கு ‘நீட்’ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை மத்திய அரசு திட்டம்
மருத்துவ மேற்படிப்புக்கு ‘நீட்’ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதா தயாராகி வருகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய மருத்துவ கவுன் சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாக்கி உள்ளது. அதில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்துடன் கூடிய வரைவு மசோதா, விரைவில் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று மத்திய அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு பிறகு, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-
புதிய திருத்தத்தின்படி, எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வு, நாடு முழுவதும் ‘நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்’ (நெக்ஸ்ட்) என்ற பெயரில் பொதுவான தேர்வாக நடத்தப்படும். அந்த தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வை முடித்த பிறகு, முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக அவர்கள் நீட் போன்ற எந்த நுழைவுத்தேர்வும் எழுத வேண்டியது இல்லை. பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதுபோல், எம்.பி.பி.எஸ். முடித்த பிறகு, டாக்டராக தொழில் செய்வதற்கான லைசென்ஸ் பெற மாணவர்கள் எந்த தேர்வும் எழுத வேண்டியது இல்லை.
இருப்பினும், ‘எய்ம்ஸ்‘ மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தனி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற விதிமுறை நீடிக்கும். டி.எம்., எம்.சிஎச் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வும் நீடிக்கும்.
அங்கீகாரம் இன்றி டாக்டர் தொழில் செய்பவர்களுக்கு ஓராண்டுவரை கடும் காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையில் ஒரு திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (15.07.2019) கடைசி நாள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (திங்கள்கிழமை) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூன் 12-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் பதிவு ஜூன் 24-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பி.எட். முடித்த முதுகலை பட்டதாரிகளும், எம்பிஎட் பட்டதாரிகளும் இத்தேர் வுக்கு ஆன்லைனில் (www.trb.tn.nic.in) விண்ணப்பித்து வரு கிறார்கள்.
ஆன்லைனில் விண்ணப் பிக்க இன்று கடைசி நாள் ஆகும். மாலை 5 மணி வரை விண் ணப்பிக்கலாம்.
TRUST EXAM NOTIFICATION | ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுத் துறை வெளியிட்ட அறிவிப்பு:
ஊரகப் பகுதிகளில் அரசு அங்கீகாரமுள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ‘ஊரகத் திறனாய்வு தேர்வு’ (டிரஸ்ட்) நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் 100 மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் 2 முடிக்கும் வரை ஆண்டு தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.
நடப்பு கல்வியாண்டில் செப்டம்பர் மாதம் டிரஸ்ட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜூலை 15) தொடங்கி ஜூலை 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை யாசிரியர்கள் மூலம் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங் களை ரூ.10 தேர்வு கட்டணத்துடன் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ள 2019-20 எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கை அறிவிப்பு.
2019-20-ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணவர்கள் அரசு / அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக்கழகம் / துறைகள் (University Departments) /வட்டார மையங்கள் (Regional Centers) / சென்னை பல்கலைக் கழகம் / இதர பல்கலைக் கழகங்கள்* / சுயநிதி பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை - 25 மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை - 06 அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்.பி.ஏ. / எம்.சி.ஏ, முதுநிலை பட்டப்படிப்பு (MBA/MCA/MCA(LE)) சேர்க்கைக்கான விண்ண ப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதள வாயிலாக விண்ணப்ப பதிவு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 03.08.2019 5.00 P.M.விண்ண ப்பிக்கும் முறை: https://www.tn-mbamca.com/ என்ற இணையதள வாயிலாக விண்ண ப்பித்தல் வேண்டும்.
அரசின் ஒவ்வொரு முடிவுகளையும் எதிர்த்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்வது வாடிக்கையாக உள்ளது ஐகோர்ட்டு நீதிபதி வருத்தம்
அரசின் ஒவ்வொரு முடிவுகளையும் எதிர்த்து வழக்கு தொடர்வதை ஆசிரியர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர் என்று ஐகோர்ட்டு நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, 52 ஆயிரத்து 933 குழந்தைகள் படிக்கின்றனர்.
இந்த குழந்தைகளுக்கு பாடம் நடத்த, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள 5 ஆயிரத்து 934 இடைநிலை ஆசிரியர்களையும், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பள்ளிகளில் உள்ள 1,979 ஆசிரியர்களையும் நியமித்து தமிழக கல்வித்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை ஏற்கனவே ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர், அதே பள்ளியில் அமைந்துள்ள அங்கன்வாடி மழலையர் பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று அந்த ஆசிரியர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதேபோல, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு பிளடர், ‘தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். அவர்களை மாற்றம் செய்து நியமிக்க காலஅவகாசம் ஆகும் என்பதால் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களை தற்காலிகமாக அதிகாரிகள் நியமித்துள்ளனர். மழலையர் வகுப்பு எடுக்க நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பள விகிதங்கள் உள்ளிட்ட மற்ற பயன்களில் எந்த மாற்றமும் இல்லை’ என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மழலையர் பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அங்கு பணியாற்ற வேண்டும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளை படிக்க வைக்க முடியாத ஏழைகளுக்கு தமிழக அரசு இந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை தொடங்கியுள்ளது.
இடைநிலை ஆசிரியராக பணியாற்றிவிட்டு, இந்த மழலையர் பள்ளிகளில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலாக நினைக்கின்றனரா?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர், ‘அண்மை காலங்களில் ஆசிரியர்கள் எதற்கு எடுத்தாலும் வழக்கு தொடர்கின்றனர். இடமாறுதல் தொடங்கி அரசின் ஒவ்வொரு முடிவுகளையும் எதிர்த்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்’ என்று வருத்தம் தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி, ‘மழலையர் பள்ளிகளுக்கு நியமிக்கப்படவுள்ள உபரி ஆசிரியர்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
NVS RECRUITMENT 2019 | நவோதயா வித்யாலயா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2365 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.08.2019.
- NVS RECRUITMENT 2019 | நவோதயா வித்யாலயா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2365 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.08.2019.
- தேர்வு நடைபெற உள்ள நாள் : 05.09.2019 முதல் 10.09.2019 .
- இணைய முகவரி : www.navodaya.gov.in
மத்திய அரசின் மனிதவளத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 2365 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Assistant Commissioner (Group-A) காலியிடங்கள்: 05 வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.78800-209200 பணி: Post Graduate Teachers (PGTs) (Group-B) காலியிடங்கள்: 430 சம்பளம்: மாதம் ரூ.47600-151100 வயதுவரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி: Trained Graduate Teachers (TGTs) (Group-B) காலியிடங்கள்: 1154 சம்பளம்: மாதம் ரூ.44900-142400 வயதுவரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி: Miscellaneous Category of Teachers (Group-B) காலியிடங்கள்: 564 சம்பளம்: மாதம் ரூ. 44900-142400 வயதுவரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி: Female Staff Nurse (Group B) காலியிடங்கள்: 55 சம்பளம்: மாதம் ரூ.44900-142400 வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Legal Assistant (Group C) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.35400-112400 வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Catering Assistant (Group C) காலியிடங்கள்: 26 சம்பளம்: மாதம் ரூ.25500-81100 வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். Lower Division Clerk (Group C) காலியிடங்கள்: 135 சம்பளம்: 19900-63200 வயதுவமர்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.09.2019 முதல் 10.09.2019 விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2019 முதல் 09.08.2019
TN FORESTS RECRUITMENT 2019 | TN FORESTS DEPT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : வனக்காவலர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 564 . விண்ணப்பம் துவக்கம் : 20.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.08.2019.
- TN FORESTS RECRUITMENT 2019 | TN FORESTS DEPT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : வனக்காவலர் .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 564 .
- விண்ணப்பம் துவக்கம் : 20.07.2019.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.08.2019.
- இணைய முகவரி : https://www.forests.tn.gov.in
வனக்காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் (விளம்பர எண்.1/2019, நாள்: 07-03-2019-அறிவிக்கை எண்-1 இணையதளம் வழி விண்ணப்பித்தல் துவங்கும் விபரம் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் விளம்பரம் எண்.1/2019, நாள்: 07/03/2019 (அறிவிக்கை எண்-1ன்படி வனத்துறையில் காலியாக உள்ள 564 வனக்காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான இணையவழி தேர்விற்கு இணையதளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்களை வரவேற்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நடைபெறுவது குறித்தான முக்கியமான நாட்கள் தோராயமானது) பற்றிய விபரங்களும் 07/03/2019. மற்றும் 02/07/2019 தேதியிட்ட அறிவிக்கைகளின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. வனக்காவலர் (564) பதவிகளுக்குரிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு 20/07/2019 அன்று துவங்கி 10/08/2019 வரை நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுக்கல்லூரிகளில் 4,600 உதவி பேராசிரியர் காலியிடங்கள்.செட், நெட் தேர்ச்சி பெற்று 35,000 பேர் காத்திருப்பு
தமிழகம் முழுவதும் உள்ள அரசுக்கல்லூரிகளில் 2013ம் ஆண்டுக்கு பின் உதவி பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை என்று தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர் பாக தேர்வர்கள், கவுரவ விரி வுரையாளர்கள் கூறிய தாவது தமிழகத்தில் அர சுக் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியில் சேர மாநில அரசு நடத் தும் செட் தேர்வு அல்லது தேசிய அளவில் நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி நடத் தும்நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும் அல் லது அத்துடன் பி.எச்டிபட் டம் பெற்றிருக்கவேண்டும். 2010ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணி கள் பெரிய அளவில் நிரப்பப்படவில்லை . 2010, 2012ம் ஆண்டுகளில் கோவை பாரதியார் பல்கலைக்கழ கம் செட் தேர்வு நடத்தி யது. 2013ம் ஆண்டில் அறி விக்கை வெளியிடப்பட்டு 2015ம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டுமே ஆயிரம் பேர் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து உரு வான காலிப்பணி யிடங்கள் நிரப்பப்பட்ட வில்லை ,
2016 முதல் 2018 வரை 3 ஆண்டுகள் கொடைக் கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து உதவிப் பேராசிரியர் பணியிடங் கள் நிரப்பப்படவில்லை , தமிழகத்தில் கடந்த 9 ஆண் டுகளில் செட், நெட் தேர் வுகளில் தேர்ச்சி பெற்றும் பி.எச்டி முடித்து 35,000 பேர் வரை உதவி பேராசி ரியர் நியமனத்துக்காக காத் திருக்கின்றனர்.தமிழக அர சுக்கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளில் புதிய படிப்புகள் பல தொடங்கப்பட்டுள்ளன, அவற்றின் மூலம் 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளன, அதே போல் நகர் புறங் களில் உள்ள அரசுக்கல்லூரிக ளி ல் இரண்டு ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டு அனைத்து கல்லூரிகளிலும் 1600 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் கவு ரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
செட், நெட், பி.எச்டி. தேர்ச்சி பெற்ற 35,000 பேரில் 5 ஆயிரம் பேர் வரை தனியார் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்துக்கு பணி செய்து வருகின்றனர், மற்றவர்கள் தங்களின் படிப்புக்கு சம்பந்தம் இல் லாத வேலைகளை செய்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு தேர்வர்கள், கவுரவ விரிவுரையாளர் கள் கூறினர்.
தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நிறுத்தம் .
அரசாணை (டி) எண்.218, பள்ளிக் கல்வித் (பக5(மத் துறை, நாள்.20.06.2019-ன்படி அனுமதி வழங்கப்பட்டன, அரசு சிறப்பு வழக்கறிஞர் (கல்வி) அவர்களின் 11.07.2019 நாளிட்ட கடிதத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு.சிவாஜிகணேசன் மற்றும் பலரால் தொடரப்பட்ட வழக்குகள் டபிள்யு.பி எண். 20090, 19946, 20180, 20277, 20278 மற்றும் 20281/2019-ல் அரசாணை (1டி) எண்.218, பள்ளிக் கல்வித் (பக5(மத் துறை, நாள்.20.06.2019 ஐ நிறுத்தம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் நிறுத்தம் செய்யப்படுகின்றன.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 2019 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நடைபெற்ற, ஜூன் 2019, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) சிறப்புத் துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வுர்கள் உட்பட) தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே 10.07.2019 (புதன்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
CLASS 9-TAMIL-SMART-ENGLISH- -ENGLISH-WORK BOOK- MATHEMATICS-EM- MATHEMATICS-TM-SCIENCE-EM-SCIENCE-TM-SOCIAL-SCIENCE-EM-SOCIAL-SCIENCE-TM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
- CLASS 9-TAMIL-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
- CLASS 9-SMART-ENGLISH-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
- CLASS 9-ENGLISH-WORK BOOKS-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
- CLASS 9-MATHEMATICS-EM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
- CLASS 9-MATHEMATICS-TM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
- CLASS 9-SCIENCE-EM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
- CLASS 9-SCIENCE-TM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
- CLASS 9-SOCIAL-SCIENCE-EM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
- CLASS 9-SOCIAL-SCIENCE-TM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
ரெயில்வே துறையில் 2.94 லட்சம் காலிப்பணியிடங்கள் - மக்களவையில் பியூஸ் கோயல் தகவல்
ரெயில்வே துறையில் 2.94 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் மக்களவையில் தெரிவித்தார்.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 10 லட்சம் பேர் விண்ணப்பம். ஜூலை 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 6491 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கையினை 14.06.2019 அன்று வெளியிட்டது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.07.2019 ஆகும். இன்று மாலை வரை சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். 14.07.2019 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது. 16.07.2019 வரை தேர்வுக்கட்டணம் செலுத்தலாம்.
கடைசி நாளில் விண்ணப்பிக்க வரும் விண்ணப்பதாரர்களை எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அதனை எதிர்கொள்ளும் அளவில் தேவையான எண்ணிக்கையிலான சர்வர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தேவையான அளவு இன்டெர்னெட் அலைவரிசை (Internet Bandwidth) கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 14.07.2019 இரவு 11.59 மணி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாளுக்கும் (14.07.2019) தேர்வு நாளுக்கும் (01.09.2019) இடையே மிகக் குறைந்த நாட்களே இருப்பதால், விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதியை எக்காரணம் கொண்டும் நீட்டிக்க இயலாது. எனவே விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல், உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் அவர்களின் பயனாளர் குறியீடு (USER ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியன மறந்துவிட்டால் அதனை மிகவும் எளிமையாக மீட்டெடுக்க தேர்வாணைய இணைய தளத்தில் (www.tnpscexams.in) இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவுக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் அவர்களின் பணப்பரிமாற்ற விவரத்தினை விண்ணப்பம் செலுத்தும் பக்கத்தில் உள்ள “VIEW PREVIOUS PAYMENT” என்ற இணைப்பினை கிளிக் செய்து பணப்பரிமாற்றம் நிறைவடைந்துவிட்டதா அல்லது தோல்வியடைந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம். பணப்பரிமாற்றம் தோல்வியடைந்துவிட்டால் அவர்கள் பணம் செலுத்துவதற்கான கடைசி நாளுக்குள் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.
தொகுதி 4 க்கு விண்ணப்பத்தினை பதிவு செய்து இறுதியாக சமர்ப்பித்து அதற்கான விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டிருந்தால் மட்டுமே அது முழுமை பெற்ற விண்ணப்பமாக கருதப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்த விவரங்களை அவர்களின் தன்பதிவுப் பக்கத்தில் (Profile) தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப விவரங்களை விண்ணப்பம் இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர் வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டுவிட்டபின்னர், அதில் உள்ள விவரங்களை மாற்ற முடியாது. இது தொடர்பாக பெறப்படும் மின்னஞ்சல் மற்றும் மனுக்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
பயனாளர் குறியீடு, கடவுச்சொல், புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம், நிரந்தரப்பதிவு தொடர்பான பிரச்சனைகள், நடப்பு தேர்வு விண்ணப்பம் குறித்த தகவல்கள், பதிவுக்கட்டணம் அல்லது தேர்வுக்கட்டணம் செலுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர் உதவி மைய எண்களான 044 25300336, 25300337, 25300338, 25300339 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளவும் அல்லது helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிகைகளை உரிய விவரங்களுடன் அனுப்பவும்.
இதர பொதுவான கேள்விகள் மற்றும் தகவல்களுக்கு 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
Subscribe to:
Posts (Atom)