உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முடிவு இடைநிலை வகுப்புகளுக்கு பணியிறக்கம் செய்யவும் திட்டம்

அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மேலும், தேவைக்கேற்ப உபரி ஆசிரியர்கள் பணியிறக்கம் செய் யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 58 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2 லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு உள்ளிட்ட பல காரணங் களால் உபரி ஆசிரியர்கள் எண் ணிக்கை ஆண்டுதோறும் அதி கரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத மாணவர் சேர்க்கையின்படி, அரசுப் பள்ளிகளில் 16,110 ஆசிரி யர்கள் உபரியாக உள்ளது கண்டறி யப்பட்டுள்ளது. இவர்களை கலந் தாய்வு மூலம் பணிநிரவல் செய்ய முடிவு செய்து, அதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஜூன் 20-ம் தேதி வெளியிட்டது. அதேநேரம் உபரியாக உள்ள ஆசிரியர்களில் 14 ஆயிரம் பேர் வரை பட்டதாரி ஆசிரியர்களாகவே இருப்பது கல்வித் துறைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், பணிநிரவல் மூலம் அதிகபட்சம் 4 ஆயிரம் ஆசிரியர் கள் வரை மட்டுமே பணியிட மாற் றம் செய்ய முடியும். இதனால் எஞ்சியுள்ளவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால் உபரி பட்டதாரி ஆசிரி யர்களை பணியிறக்கம் செய்யவும் தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கல்வித் துறையின் செலவுகளை கட்டுப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல் வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. அதன்படி, ஒருங்கிணைந்த கல்வி திட்டத் தின்கீழ் மாநில அரசுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் கடும் கட்டுப்பாடுகளை முன்வைத்துள்ளது. தேவை இல் லாத செலவுகளை தவிர்ப்பதற்காக குறைந்த மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகளை இணைத்து, உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி களை வழங்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழகத்தில் 15-க்கும் குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர கடந்த ஆகஸ்ட் மாத மாணவர் சேர்க்கை நிலவரப்படி உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. அதில் தொடக் கக் கல்வித் துறையில் 2,008 இடை நிலை ஆசிரியர்கள், 271 பட்டதாரி ஆசிரியர்களும் பள்ளிக்கல்வித் துறையில் 208 முதுநிலை ஆசிரி யர்கள், 13,623 பட்டதாரி ஆசிரியர் களும் உபரியாக உள்ளனர். இதில் ஏற்கெனவே அங்கன்வாடி களுக்கு 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். எஞ்சியவர்களில் பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. பணிநிரவல் செய்தாலும் 10 ஆயிரம் ஆசிரி யர்கள் வரை எஞ்சியிருப்பார்கள். அவர்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்கப்பட உள்ளது. கூடுதலாக இருக்கும் உபரி ஆசிரியர்களை இடைநிலை வகுப்புகளுக்கு பணி யிறக்கம் செய்யவும் திட்டமிடப் பட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி ஆசிரியர் கள் 4, 5-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிக்கப்படுவர். அவர்களின் ஊதியம் உள்ளிட்ட பணிநிலையில் மாற்றம் இருக்காது. இதற்கான ஒப்புதலை தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்திடம் தமிழக அரசு கோரியுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தீவிரமடையும். இதுதவிர, தகுதியான பட்டதாரி ஆசிரியர்களை தற்காலிகமாக மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் எடுப்பதற்கு மாற்றுப்பணி வழங்கப் பட்டு உள்ளது. மேலும், உபரி ஆசிரியர்களை ஆசிரியர் அல்லாத ஆங்கிலவழிக் கல்வி வகுப்பு களுக்கு இடமாற்றவும், அலுவல் பணிகளுக்கு பயன்படுத்தவும் பரிசீலனை செய்யப்பட்டு வரு கிறது. புதிய தேசிய கல்விக் கொள்கை அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்ட பின்னர் இந்த விவகாரம் தமிழக அரசுக்கு சுமுகமான சூழலாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Read More News | Download

4 comments:

 1. No importance for education no importance for agriculture.......

  ReplyDelete
 2. Oneday no one will survive...... For education department u don't have money to spent..... But you have money to put road............ Every ministers have own private schools and colleges worst govt..... Karma is a boomerang one day u will realize

  ReplyDelete
 3. சர்பளஸ், சர்ப்ளஸ் அல்லாதவங்கனு இரண்டு லிஸ்ட்டை வெளியிட்டால்தானே குளறுபடி வெளியில் வரும்

  ReplyDelete
 4. இதுல எந்த ஆசிரியரும் கருத்து சொல்றதில்லயே. அப்புறம் எதுக்கு இந்த செய்தி போடறீங்க.
  நீக்குங்க.

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.