உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

மருத்துவ தேர்வு வாரிய விதிகளில் திருத்தம்: மருந்தாளுனர் பணிக்கு எழுத்து தேர்வு அரசாணை வெளியீடு

தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வு மூலம் நியமிக்கப்படும் பணியிடங்கள் தவிர, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மற்ற பணியிடங்களுக்கு ஊழியர்களை நியமிக்க மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், 353 மருந்தாளுனர்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பாணையை மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, பி.பார்ம் படித்து தமிழ்நாடு மருந்தக கவுன்சிலில் கடந்த மார்ச் 1-ந் தேதிக்கு முன்பு பதிவு செய்தவர்களை தகுதியாகக்கொண்டு, ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தநிலையில் மருத்துவப்பணிகள் தேர்வு வாரியத்தலைவர் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘353 காலிப்பணியிடங்களுக்கு 23 ஆயிரத்து 8 விண்ணப்பங்கள் வந்துள்ளன. எனவே, தகுதியுள்ளோர் பட்டியலை தயாரிக்க ‘வெயிட்டேஜ்’ முறையை பின்பற்றினால் விண்ணப்பதாரர்களிடையே தெளிவின்மையும், சந்தேகமும் எழும். மேலும் சில கல்வி நிறுவனங்களில் பட்டயம் மற்றும் பட்டப்படிப்புக்கான அதிகபட்ச மதிப்பெண் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. எனவே மருந்தாளுனர் பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். அதற்கேற்ப மருத்துவப்பணிகள் தேர்வு வாரிய நடைமுறை விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். அவரது முன்மொழிவை அரசு பரிசீலித்தது. மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வை நடத்துவதற்கு இந்த ஒருமுறை மட்டும் விதிகளை தளர்த்துவதற்கு மருத்துவப்பணிகள் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.