உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC RESULT PUBLISHED | 31 போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வரலாற்றுச் சாதனை.

செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2018ம் ஆண்டில் பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான 31 அறிவிக்கைகளை வெளியிட்டு அனைத்திற்கும் தேர்வுகள் நடத்தி மிகக் குறுகிய நாட்களில் முடிவுகளை வெளியிட்டு மிகப் பெரும் சாதனை படைத்துள்ளது. மேலும் 2019ம் ஆண்டில் தற்போது வரை 29 போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அவற்றில் 24 (23 நேர்முகத் தேர்வுடன் கூடிய பதவிகள் மற்றும் 1 நேர்முகத்தேர்வு அல்லாத எழுத்துத் தேர்வு மட்டுமே உள்ள பதவிகள் அடங்கும்) பதவிகளுக்கான தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள 23 நேர்முகத்தேர்வுடன் கூடிய பதவிகளில் 14 பதவிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 தேர்வுகளுக்கான நேர்காணல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதுவரை 2019ல் இதுநாள் வரை 18 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு அவற்றில் 14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் 5 தேர்வுகளுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது. குறிப்பாக 15.07.2019 அன்று மட்டும் கடந்த மே மாதம் வரை நடத்தப்பட்டுள்ள 12 போட்டித் தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளமை ஒரு வரலாற்றுச் சாதனையாகும். (இணைப்பில் உள்ள பட்டியலைக் காண்க) இதன் மூலம் தேர்வாணையம் மிகக் குறுகிய கால இடைவெளியில் அதிக அளவிலான அறிவிக்கைகளை வெளியிட்டு அதற்கான போட்டித் தேர்வுகளை திறம்பட நடத்தி, மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் மிகக் குறுகிய காலத்தில் மிக நேர்த்தியாகச் செயல்பட்டு உடனுக்குடன் முடிவுகளை வெளியிட்டுவருவது தேர்வர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும். இரா. சுதன் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் 15.07.2019

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.