உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TRUST EXAM NOTIFICATION | ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத் துறை வெளியிட்ட அறிவிப்பு: ஊரகப் பகுதிகளில் அரசு அங்கீகாரமுள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ‘ஊரகத் திறனாய்வு தேர்வு’ (டிரஸ்ட்) நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் 100 மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் 2 முடிக்கும் வரை ஆண்டு தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில் செப்டம்பர் மாதம் டிரஸ்ட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜூலை 15) தொடங்கி ஜூலை 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை யாசிரியர்கள் மூலம் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங் களை ரூ.10 தேர்வு கட்டணத்துடன் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.