உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு முறைகளில் மாற்றம். பாடத்திட்டம் மற்றும் வினாத்தாளும் மாறுகின்றன டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

 • குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு முறைகள், பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் முறைகளில் மாற்றம் செய்து டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. 
 • இந்த முறை வரும் தேர்வில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. 
 • அந்த வகையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 என பல்வேறு நிலைகளுக்கும் தனித்தனியே தேர்வு நடத்தப்படுகிறது. 
 • இதற்காக ஒவ்வொரு நிலைகளுக்கும் கல்வி, வயது தகுதிகள் மற்றும் பாடத்திட்டங்கள் என்ற வழிமுறைகளை நிர்ணயம் செய்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. 
 • இந்தநிலையில் குரூப்-2 நிலைகளில் உள்ள பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாதது (குரூப்-2 ஏ) என்ற 2 வகைகளில் தேர்வு நடத்தப்படுகிறது. 
 • இதில் குரூப்-2 பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு இருக்கும். குரூப்-2 ஏ பணிகளுக்கு ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் இருக்கும். 
 • தற்போது அந்த முறையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மாற்றியுள்ளது. மேலும், அந்த பணிகளுக்கான பாடத்திட்டம், வினாத்தாள் முறையிலும் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது. 
 • பொதுவாக குரூப்-2 பணிகளுக்கு முதல்நிலை தேர்வில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு, மனக்கணக்கு, திறனறிவு என்ற அடிப்படையில் 200 வினாக்கள் கேட்கப்படும். 
 • ஆனால் இனிமேல் அந்த முறை கிடையாது. அதாவது இதில் பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் எடுக்கப்பட்டு, பொது அறிவில் மட்டுமே 175 வினாக்களும் (பட்டப்படிப்பு தரம்), மனக்கணக்கு, திறனறிவு, நுண்ணறிவு (10-ம் வகுப்பு தரம்) தொடர்பாக 25 வினாக்களும் என 200 வினாக்கள் கேட்கப்படும். இவையனைத்தும் கொள்குறி வகை வினாக்களாக இருக்கும். அதேபோல், முதன்மை தேர்வில் பாடத்திட்டத்திலும், வினாக்கள் வடிவமைப்பிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன. 
 • அதன்படி, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் பிரிவுகளில் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இது முதல் பிரிவு ஆகும். 
 • 2-வது பிரிவில், சுருக்கி எழுதுதல், பொருள் உணர்ந்து பதில் அளித்தல், சுருக்க குறிப்பில் இருந்து விரிவாக எழுதுதல், திருக்குறள் தொடர்பாக கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல் (அலுவலகம் சார்ந்தது) என 200 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். 
 • இவை கொள்குறி வகையாக இருக்காது, பள்ளி வகுப்புகளில் இருக்கும் தேர்வு போல எழுத வேண்டும். முதல் பிரிவில் 100 மதிப்பெண்ணுக்கு கண்டிப்பாக 25 மதிப்பெண் எடுத்தாக வேண்டும். அப்படி இல்லை என்றால், 2-வது பிரிவு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. இந்த தேர்வை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதலாம். 
 • பிரிவு-1, பிரிவு-2 இரண்டிலும் பெறும் மதிப்பெண் தான் கணக்கில் கொள்ளப்படும். முதன்மை தேர்வின் 300 மதிப்பெண், நேர்முகத்தேர்வு 40 மதிப்பெண் ஆகியவை சேர்ந்த மொத்த மதிப்பெண்ணான 340-ல், அனைத்து வகுப்பினரும் குறைந்தபட்சம் 102 மதிப்பெண் எடுக்க வேண்டும். 
 • குரூப்-2 ஏ பணிகளுக்கு ஒரே தேர்வு முறை முன்பு இருந்தது. தற்போது அது மாற்றி அமைக்கப்பட்டு குரூப்-2 பணிகளுக்கு போன்று முதல்நிலை, முதன்மை தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும். நேர்முகத்தேர்வு கிடையாது. முதன்மை தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கு அனைத்து வகுப்பினரும் குறைந்தபட்சம் 90 மதிப்பெண் எடுத்தாக வேண்டும். 
 • புதிய பாடத்திட்டம் குறித்து tnpsc.gov.in/new_syllabus.html என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். 
 • இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் கே.நந்தகுமார் கூறுகையில், ‘குரூப்-2 முதன்மை தேர்வில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. முன்பு பாட அறிவை வளர்க்கும் விதமாக வினாக்கள் கேட்கப்பட்டன. 
 • தற்போது மொழி அறிவை வளர்க்கும் விதமாக பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வினாக்கள் கேட்கப்பட இருக்கின்றன. குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ பணிகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 
 • அந்த தேர்வில் இருந்து இந்த முறை அமல்படுத்தப்படும்’ என்றார்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு அறிவிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப் படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழகத்தின் ஈரோடு மண்ட லத்துக்கு வழங்கப்பட்டுள்ள 22 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக் கும் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத் தப்படும் போட்டித் தேர்வுக்கான தேதி அடுத்த வாரத்தில் அறிவிக் கப்படும். கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு விரை வில் மடிக்கணினி வழங்கப்படும்.

9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் ஏதும் இல்லை. மாணவர் களுக்கு விலையில்லா ஷூ வழங்கும் திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றார்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழக அரசு பள்ளிக்கல்வி துறையின் ஏராளமான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் 4000க்கும் அதிகமான முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் கடந்த சூன் 11 முதல் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும் காலாண்டு விடுமுறையில் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று விரைவில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். 
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

RBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : OFFICER B GRADE உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 150+20+23 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.10.2019.

 • RBI RECRUITMENT 2019 | RBI  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : OFFICER B GRADE உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 150+20+23 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.10.2019.
 • இணைய முகவரி : www.rbi.org.in
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SIPCOT RECRUITMENT 2019 | SIPCOT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2019.

 • SIPCOT RECRUITMENT 2019 | SIPCOT  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2019.
 • இணைய முகவரி : www.sipcot.com
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

காலாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பள்ளிகளுக்கு அக்.2 வரை தொடர் விடுமுறை 

காலாண்டுத் தேர்வு இன்றுடன் முடிவதால் அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை முதல் அக் டோபர் 2-ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பருவத் தேர்வு களும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதியாண்டு தேர்வுகள் முறையும் அமலில் உள்ளன. அதன்படி அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக் கான முதல் பருவத்தேர்வு மற் றும் காலாண்டுத் தேர்வு செப்.12-ல் தொடங்கியது.

அரசு, அரசு உதவி மற்றும் தனியார் என அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் பின்பற்றப்பட்டது. தொடர்ந்து காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் இன்று டன் நிறைவடைகின்றன. அதன்பின் நாளை தொடங்கி அக்.2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட உள்ளது.

விடுமுறை காலத்தில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10, 11, 12-ம் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்பும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பும் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC MAY 2019 DEPARTMENTAL EXAM RESULTS PUBLISHED (ALL SUBJECTS) | TNPSC துறைத்தேர்வு முடிவுகள் அனைத்துப் பாடங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC MAY 2019 DEPARTMENTAL EXAM RESULTS PUBLISHED (ALL SUBJECTS) | TNPSC துறைத்தேர்வு முடிவுகள் அனைத்துப் பாடங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  CLICK 
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மேல்நிலை (+1 & +2) வகுப்பில் ஆறு பாடங்கள் 5 பாடங்களாக குறைப்பு - 500 மதிப்பெண்கள் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு.

பள்ளிக்கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தமிழகத்தில் மேல்நிலை கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து, மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி ஆணை வெளியிடப்படுகிறது. | பள்ளிக்கல்வித் (அ.தே) துறை அரசாணை (நிலை) எண். 166 நாள்: 18.09.2019  | DOWNLOAD
முக்கிய கூறுகள் :
 • பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பில் 500 மதிப்பெண்கள் திட்டம் அறிமுகம். 
 •  ஆறு பாடங்கள் 5 பாடங்கள் ஆக குறைப்பு அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு.
 • புதிய அரசாணையின்படி 6 பாடங்கள், 5 பாடங்களாக குறைக்கப்பட உள்ளன. 
 • பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்தில் தற்போது ஒவ்வொரு பிரிவிலும் 6 பாடங்கள் இடம் பெறுகின்றன. 
 • மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டுக்கும் சேர்த்து படிக்கக்கூடிய வகையில் பாடப்பிரிவுகள் தற்போது இருக்கின்றன. அதாவது, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என ஆறு பாடங்கள் இருக்கின்றன.
 • இந்த பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் என இரண்டு துறைகளுக்கும் செல்ல முடியும். 
 • தற்போது, இந்த பிரிவிலிருந்து கணிதப்பாடம் நீக்கப்பட இருக்கிறது. அதன்படி மருத்துவ படிப்பிற்கு மட்டும் செல்லக்கூடிய மாணவர்கள் இந்த பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம்.
 • அதே போல் பொறியியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு, தமிழ் , ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் என ஐந்து பாடங்கள் மட்டும் இருக்கும். 
 • வணிகவியல் பிரிவை தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம் வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் என ஐந்து படங்கள் மட்டும் இருக்கும். 
 • கணக்குப்பதிவியல் பிரிவாக இருந்தால் , தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணக்குப் பதிவியல் தணிக்கையியல் கணினி தொழில்நுட்பம் என ஆறு பாடங்கள் இருக்கின்றன.இதில், கணினி தொழில்நுட்பம் பாடம் நீக்கப்பட்டு 5 பாடங்கள் மட்டும் இடம்பெற உள்ளன. 
 • இப்படி ஒவ்வொரு பிரிவிலும் இருக்கக்கூடிய 6 பாடங்கள் 5 பாடங்களாக குறைக்கப்பட்டு, தலா 100 மதிப்பெண்கள் என, 500 மதிப்பெண்களாக குறைக்கப்படுகிறது. 
 • நடப்பு கல்வியாண்டிற்கு இந்த மாற்றம் அமலுக்கு வராது என்றும், 2020 - 21 கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் .
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்ககமாக மாற்றி தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம்  முழுவதும் இயங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயங்கி வந்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நர்சரி, பிரைமரி உள்ளிட்ட அரசு உதவி பெறாத பள்ளிகள் இந்த தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் வரும் என்றும் அரசிதழில் தெளிவுபடுத்தபப்ட்டுள்ளது | DOWNLOAD
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB PG ONLINE TEST | Teacher’s Care Academy யில் பதிவு செய்து எளிமையான முறையில் PGTRB மாதிரி ஆன்லைன் தேர்வினை அனைத்து பாடங்களுக்கும் எழுதி பழகுங்கள்.

TRB PG ONLINE TEST | Teacher’s Care Academy யில் பதிவு செய்து எளிமையான முறையில் PGTRB மாதிரி ஆன்லைன் தேர்வினை அனைத்து பாடங்களுக்கும் எழுதி பழகுங்கள்.

TRB ONLINE TEST - CLICK HERE

TCA - USER MANUAL - CLICK HERE

கீழே மாதிரி வினாக்கள் தரப்பட்டுள்ளன
விடைகளை பார்க்க பதிவு செய்து பயிற்சி செய்யுங்கள்
TRB PG TAMIL FULL TEST 1

TRB PG ENGLISH FULL TEST 1

TRB PG PHYSICS FULL TEST 1

TRB PG CHEMISTRY FULL TEST 1

TRB PG ZOOLOGY FULL TEST 1

TRB PG COMMERCE ENGLISH MEDUIM FULL TEST 1

TRB PG COMMERCE TAMIL MEDUIM FULL TEST 1

TRB PG ENGLISH FULL TEST 1

TRB PG HISTORY FULL TEST 1


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PG TRB ONLINE EXAM 2019 - HALL TICKET AND REVISED TIME TABLE PUBLISHED | ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியம், வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தி 

 • 2018-2019ம் ஆண்டிற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 க்கான கணினி வழித் தேர்வு 27.09.2019, 28.09.2019 மற்றும் 29.09.2019 தேதிகளில் (காலை / மாலை) நடைபெற உள்ளது. 
 • இத்தேர்விற்கு உரிய அனுமதி சீட்டு (Admit Card) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in -ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
 • தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை Printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் (Reporting Time) மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் (Original Identity Card) விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் (Original passport size Photograph) தவறாமல் எடுத்து வர வேண்டும். 
 • தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 07.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்விற்கு 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகைபுரிய வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது. 
 • மேற்படி கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சி தேர்வு (Practice Test / Mock Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள் நுழைவு மற்றும் கடவுச்சொல்லினைப் (Login ID and Password) பயன்படுத்தி www.trb.tn.nic.in -ல் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 
 • இந்த பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே எனவும் தெரிவிக்கலாகிறது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் ஆன்லைன் முறைக்கு எதிரான மனுவை பரிசீலிக்க வேண்டும் தேர்வு வாரியத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கான தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தக்கூடாது என்று கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை வருகிற 25-ந் தேதிக்குள் பரிசீலிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரை சேர்ந்த ஆர்.கிருத்திகா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12-ந் தேதி வெளியிட்டது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்தோம். இந்த தேர்வு வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. கம்ப்யூட்டர் பிரிவில் பட்டம் பெற்றவர்கள்தான் ஆன்லைனில் தேர்வு எழுத முடியும். மற்ற பிரிவுகளில் படித்தவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, அறிவு இருப்பது கடினம்.

மொத்தம் 150 கேள்விகளுக்கு 3 மணி நேரத்தில் கம்ப்யூட்டரில் பதில் தர வேண்டும். இது மிக கடினமான விஷயம். ‘கீ ஆன்சரை’ சரிபார்க்கவும் முடியாது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுகூட ஆன்லைன் தேர்வாக நடத்தப்படுவதில்லை. மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வும் ஆன்லைன் மூலம் நடத்தப்படவில்லை.

ஏற்கனவே, கடந்த ஜூன் 23-ந் தேதி நடத்தப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் ஆன்லைனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, பின்னர் நடத்தப்பட்டது. அந்த தேர்விலும் குளறுபடிகள் ஏற்பட்டன.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கம்ப்யூட்டர் அறிவு இல்லாமல் எப்படி இந்த தேர்வை எழுத முடியும்? அதற்கான போதிய கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கொடுத்த கோரிக்கை மனுவும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆன்லைன் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சாதாரண முறையிலான எழுத்து தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ‘மனுதாரரின் கோரிக்கையை வரும் 25-ந் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து உரிய முடிவை அறிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசு நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல் நிலை தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக பணியாளர் நலத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய தேர்வாணையக் குழு முதல் நிலைத் தேர்வுகளில் (31-5-2020) வெற்றிபெற, தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரி, முது நிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசு, கட்டணம் ஏதுமின்றி ஆறுமாத கால உண்டு உறைவிட பயிற்சியை அளிக்கிறது. இப்பயிற்சி சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ‘அகில இந்திய குடிமைப்பணித்தேர்வு பயிற்சி மையத்தில்’ அளிக்கப் படும். இப்பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு அக். 13-ல் தமிழகத்தில் 20 மையங்களில் நடைபெறும். இணையதளத்தில் இப்பயிற்சிக்கு செப்.16-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களை ‘www.civilservicecoaching.com’ என்ற இணைய தளத்தில் இருந்து பெறலாம்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

NABARD BANK RECRUITMENT 2019 | NABARD BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட்ஸ் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 82+9 . விளம்பர அறிவிப்பு நாள் : 09.09.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.10.2019.

 • NABARD BANK RECRUITMENT 2019 | NABARD BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட்ஸ் உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 82+9 .
 • விளம்பர அறிவிப்பு நாள் : 09.09.2019.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.10.2019.
 • இணைய முகவரி : https://www.nabard.org/

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TANCEM RECRUITMENT 2019 | TANCEM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : Company Secretary, Manager உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 40 . விளம்பர அறிவிப்பு நாள் : 06.09.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.10.2019.

 • TANCEM RECRUITMENT 2019 | TANCEM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : Company Secretary,  Manager உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 40 .
 • விளம்பர அறிவிப்பு நாள் : 06.09.2019.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.10.2019.
 • இணைய முகவரி : www.tancem.com

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தாள் தேர்வு முறை பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தாள் தேர்வு முறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம், தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி 10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட மற்றொரு அரசாணை:

மாணவர்களின் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் உட்பட மொழிப்பாடத் தேர்வுகள் 2 தாள்களாக (தாள்-1, தாள்-2) இல்லாமல் ஒரே தாளாக மாற்றப்பட்டது. அதேபோல், பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் தேர்வு முறையை பின்பற்ற ஆசிரியர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதையேற்று நடப்பு கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வுகள் இனி ஒரே தாளாக நடத்தப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேர்வுத்துறைக்கான கூடுதல் வேலைகள் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வுகள் இனி ஒரே தாளாக நடத்தப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேர்வுத்துறைக்கான கூடுதல் வேலைகள் தவிர்க்கப்படும்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி செய்வதில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்தாண்டு டிசம்பர் மாதம் கொண்டு வந்தது. அப்போது 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத்திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வும் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வும் நடத்த வேண்டும். அந்த தேர்விலும் மாணவர்கள் தோல்வியடையும் பட்சத்தில் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு நாடு முழுவதும் 24 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து சட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்த சட்டத்திருத்தத்தை அமல் படுத்த முடிவு செய்து அதற் கான முன்னேற்பாடுகள் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் மேற் கொள்ளப்பட்டன.

இதற்கு அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதை யடுத்து தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

இதனால் இந்த விவகாரத்தில் நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணை:

மத்திய அரசு கொண்டு வந் துள்ள இலவச கட்டாயக்கல்வி சட்டத்திருத்தப்படி பள்ளிக் கல்வியின்கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு (2019-20) முதல் பொதுத்தேர்வு நடத்த வும், தேர்வுக்கான வழிகாட்டு தல்களை அளிக்கவும் தொடக் கக்கல்வி இயக்குநர் அனுமதி கோரியுள்ளார்.

இதை பரிசீலனை செய்து 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த தேர் வின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம். இந்த பொதுத்தேர்வு நடத்துவதற்கான முறையான அறிவிப்புகளை வெளியிட்டு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள துறை இயக்குநர்கள், அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அடிப்படை கற்றலிலுள்ள குறை பாட்டை நிவர்த்தி செய்யாமல் அடுத்த வகுப்புக்கு மாற்றி விடுவதால் உயர்நிலை வகுப்பில் மாணவர்கள் திணறுகின்றனர். அடுத்தாண்டு பொதுத்தேர்வை சந்திக்கவுள்ள 9-ம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தாமல், ஆரம்ப கல்வி கற்றுத் தரும் சூழல்களே நிலவுகின்றன.

பிரிட்ஜ் கோர்ஸ் உட்பட பல சிறப்பு பயிற்சிகளை வழங்கினா லும் மாணவர்கள் கற்றல் முறையில் முன்னேற்றமில்லை. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் மாணவர் களின் எதிர்காலத்துக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால் நடப்பாண்டு முதல் 5, 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கொண்டு வரப்படுகிறது. எனினும், முதல் 3 ஆண்டுகள் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி செய்யப்படுவார்கள். அதன்பின் இறுதியாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மே, ஜூன் மாதங்களில் மறு தேர்வுகள் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும்’’என்றனர்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பொறியியல், கலை கல்லூரிகளில் 9,500 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை தகவல்

அரசு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 9,500 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அக்காலியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக உயர்கல்வித் துறை யின்கீழ் 34 அரசு பொறியியல் கல்லூரிகள், 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 113 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. கடந்த ஜூலை 19-ம் தேதி தலைமை செயலாளர் கே.சண்முகம் தலைமையில் நடை பெற்ற உயர்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தர மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வெளியான அரசாணை மூலம், அரசு பொறி யியல் மற்றும் கலைக் கல்லூரி களில் 9,500 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை முதன்மை செயலர் மங்கட்ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையில் நடை பெற்ற உயர்கல்வித்துறையின் ஆய்வுக்கூட்டத்தில் 10 கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட் டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் உயர்கல்விக்கு செல்வோரின் எண் ணிக்கையை அடுத்த 4 ஆண்டு களில் 48.6 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்த வேண் டும். கல்லூரிகளில் உட்கட்ட மைப்புகளை மேம்படுத்தும் பணி களுக்காக ரூ.428.30 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது.

இதுதவிர, தேசிய உயர்கல்வி திட்டத்தின் (ரூசா) கீழ், முதல்கட்ட மாக ரூ.349.98 கோடியும், 2-வது கட்டமாக ரூ.615.77 கோடியும் ஒதுக் கப்படும். இதில் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ரூ.116 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து கல்லூரிகளும் கணினி மயமாக்கப்படும். ஸ்மார்ட் வகுப்பு கள் தொடங்கப்பட்டு பேராசிரியர் களுக்கு நவீன பயிற்சி அளிக்கப் படும். மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதிபடுத்தப்படும். 5 பல்கலைக்கழகங்களை அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டிய லிலும், 5 ஆண்டுகளில் உலகின் சிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் பட்டியலிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

இன்னும் 4 ஆண்டுகளில் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான திறன்களை மேம் படுத்தி அனைத்து பல்கலைக் கழகங்களையும் ‘ஏ’ கிரேடு அந் தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப் படும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 6,500-ம், அரசு பொறியியல் கல்லூரிகளில் 1,070-ம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் 1,930-ம் என மொத்தம் 9,500 உதவி பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இக்காலிப்பணியிடங்கள் உட னடியாக கவுரவ விரிவுரையாளர் களைக் கொண்டு நிரப்பப்படும். பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிகளின்படி உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரி யர் தேர்வு வாரியம் மூலம் நேரடி யாக நிரப்பவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தற்போது பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும், கலை, அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் கலந்தாய்வு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது’’என்றனர்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப் 4 தேர்வு முடிவு டிசம்பரில் வெளியீடு

குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

தமிழக அரசுத் துறைகளில் குரூப் 4 தொகுதியில் கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் 6,491 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் செப்டம்பர் 1-ம் தேதி நடந்து முடிந்தது.

மாநிலம் முழுவதும் அமைக் கப்பட்டிருந்த 5,575 மையங்களில் 13.6 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தொடர்ந்து தேர்வு வினாத்தாளுக்கான விடைக் குறிப்பை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் உரிய ஆதாரங்களுடன் செப்டம்பர் 17-ம் தேதிக்குள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் வழியே தங்கள் மறுப்பை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப் படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 • உத்தேச விடைகள் பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் : 10.09.2019
 • Tentative Answer Keys Hosted on 10.09.2019

 1. பொதுத் தமிழ் GENERAL TAMIL | Download
 2. பொது ஆங்கிலம் GENERAL ENGLISH | Download
 3. பொது அறிவு GENERAL STUDIES | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CTET DECEMBER 2019 | டிசம்பர் 8-ஆம் தேதி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க செப்.18 கடைசி நாள்

நிகழாண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சிடெட்) தேர்வர்கள் வரும் செப்.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும். நாடு முழுவதும் 110 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். சிடெட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 19-ஆம் தேதி (ஆகஸ்ட் 19) முதலே பெறப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் செப்டம்பர் 18-ஆம் தேதி ஆகும்.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். சிடெட் தேர்வை சிபிஎஸ்இ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தாள்-1 தேர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது.

மதிப்பெண்- தேர்ச்சி விவரம்: தாள்-1-தேர்வில் மொழித்தாள்-1, ஆங்கிலம் (மொழித்தாள்-2), கல்வி உளவியல், கணிதம், சுற்றுச்சூழலியல் ஆகிய 5 பகுதிகளில் இருந்து தலா 30 கேள்விகள் வீதம் 150 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வீதம் மொத்த மதிப்பெண் 150 ஆகும்.

தாள்-2 தேர்வில், மொழித்தாள்-1, ஆங்கிலம், கல்வி உளவியல் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 30 கேள்விகள் வீதம் 90 கேள்விகள், கணிதம் மற்றும் அறிவியல் (கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு) பகுதியில் இருந்து 60 கேள்விகள் (சமூக அறிவியல் ஆசிரியர்கள் எனில் சமூக அறிவியல் பாடத்தில் 60 கேள்விகள்) என 150 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 150 ஆகும். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் சிடெட் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் (90) பெற்றவர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

UGC NET 2019 தகுதித்தேர்வுக்கு செப்டம்பர் 9 முதல் விண்ணப்பிக்கலாம்: NTA அறிவிப்பு

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்க்கான நெட் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அந்தவகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வரை நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் சிபிஎஸ்இ அமைப்பு நடத்தி வந்தது.

இதனையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை எனப்படும் புதிய அமைப்பு நெட் உட்பட அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்காக நெட் தேர்வு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்தப்படலாம். ஆனால் தேர்வு நடக்கும் தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில், நெட் தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் www.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி அக்டோபர் 9 ஆகும். அதேபோல டிசம்பர் 31 ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நெட் தேர்வில் 100 மற்றும் 200 மதிப்பெண்களுக்கான இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். இத்தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 உத்தேச விடைகள் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய குரூப் 4 உத்தேச விடைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு-IV –இல் அடங்கியுள்ள பதவிகள்
(தொகுதி –  IV பணிகள்)
Posts included in COMBINED CIVIL SERVICES EXAMINATION - 4 (GROUP IV SERVICES)

(தேர்வு நாள்  - 01.09.2019 மு.ப.) (Date of Examination: 01.09.2019 FN)

உத்தேச விடைகள் பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் : 10.09.2019
Tentative Answer Keys Hosted on 10.09.2019

 1. பொதுத் தமிழ் GENERAL TAMIL | Download
 2. பொது ஆங்கிலம் GENERAL ENGLISH | Download
 3. பொது அறிவு GENERAL STUDIES | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்பட்டதாக வழக்கு: கணினி ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட்டு தடை

கணினி ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச், ஜூன் மாதம் தேர்வு நடத்தியது. இந்த தேர்வு தொடர்பான அறிவிப்பில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தமிழ் மொழியில் தேர்வு நடத்தப்படாமல் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் தயானா உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். அதில், தமிழில் தேர்வு நடத்தாததால், இந்த தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், ‘தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்ட நுழைவுச்சீட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே இத்தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. முதுகலை படிப்பு வரை தமிழ் வழியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வை நடத்த வாய்ப்புகள் இருந்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழில் இத்தேர்வை நடத்தாமல் புறக்கணித்துள்ளது’ என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘கணினி ஆசிரியர் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, முடிவுகளும் அறிவிக்கப்படும் தருவாயில் உள்ளது. மனுதாரர்கள் தற்போது தமிழில் தேர்வை நடத்தவில்லை எனக்கூறி வழக்கு தொடர்ந்துள்ளது ஏற்புடையதல்ல. இந்த வழக்கிற்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரை கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 MODEL QUESTION PAPER FOR ALL SUBJECTS MARCH 2020

Year STD Subject Option
2019 12th General Tamil Download
2019 12th English Download
2019 12th Mathematics(English Medium) Download
2019 12th Accountancy Download
2019 12th Economics Download
2019 12th Commerce Download
2019 12th Business Mathematics & Statistics Download
2019 12th Physics(English Medium) Download
2019 12th Home Science Download
2019 12th Ethics & Indian Culture Download
2019 12th Advance Tamil Download
2019 12th Basic Mechanical Engineering - Theory Download
2019 12th Bio - Chemistry Download
2019 12th Botany Download
2019 12th Chemistry Download
2019 12th Computer Science Download
2019 12th Food Service Management Download
2019 12th Geography Download
2019 12th Zoology Download
2019 12th Agricultural Science Download
2019 12th Biology Download
2019 12th Computer Applications Download
2019 12th Microbiology Download
2019 12th Nursing Theory Download
2019 12th Nutrition and Dietetics Download
2019 12th Textiles and Dress Designing Download
2019 12th Basic Automobile Engineering Download
2019 12th Basic Electrical Engineering - Theory Download
2019 12th Basic Electronics Engineering Download
2019 12th Communicative English Download
2019 12th Statistics Download
2019 12th Textile Technology Download
2019 12th Basic Civil Engineering Download
2019 12th Computer Technology Download
2019 12th General Nursing Download
2019 12th Office Management & Secretaryship - Theory Download
2019 12th Political Science Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PG TRB - PHYSICS - FULL TEST - 1 - DR. V. KARIKALAN

PG TRB - PHYSICS - FULL TEST - 1 - DR. V. KARIKALAN, M.SC., B.ED., M.PHIL., PH.D., NET., SLET., SET, PG ASSISTANT IN PHYSICS, DEPARTMENT OF PHYSICS GOVT. MODEL SCHOOL, SALEM - 636 203 TAMILNADU/INDIA MOBILE : 9362853899 | DOWNLOAD
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செப்டம்பர் 13-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு விண் ணப்பிக்க 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்லை னில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

 இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), திருநெல்வேலி மாவட்டம் பாளை யங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி (100), மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என மொத்தம் 5 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட் டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படு கின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

 இதேபோல் 20 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்கள் இருக்கின்றன. இவைதவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு சுமார் 500 இடங்கள் உள்ளன. இந்திய மருத்துவ முறை படிப்பு களான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப் பெண் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்தப் படிப்பு களின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக் கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் ww.tnhealth.org, www.tnmedicalselection.net ஆகிய சுகாதாரத் துறை இணைய தளங்களில் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வ மாக விண்ணப்பங்களையும், தகவல் தொகுப்புகளையும் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய் யப்பட்ட 600-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. விண்ணப்பங்களை வரும் 13-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் செப். 13-ம் தேதி மாலை 5.30 மணிக் குள்ளாக செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் நடத்தாதது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் நடத்தாதது ஏன் என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை தயானா, சென்னை குழந்தைவேல், ரோஹினி, விழுப்புரம் விஜயகுமார், ஞானவேல் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதில் தமிழ்வழியில் பயின்றோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து, ஜூன் 23-ம் தேதி நடந்த தேர்வு ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. கேள்விகள் ஆங் கிலத்தில் கேட்கப்பட்டு இருந்தன. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துவிட்டு, தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்தியது ஏற்புடையதல்ல. மேலும் எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என்பதுகுறித்தும் முறையாக அறிவிக்கவில்லை. எனவே கணினி ஆசிரியர் தேர்வை ரத்து செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி தண்ட பாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப் பி்ல், ‘‘எந்த மொழியில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என அறிவிக் கையில் குறிப்பிடாத நிலையில், தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன் பாக அனுப்பி வைக்கப்பட்ட நுழை வுச்சீட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என அறிவிக் கப்பட்டு இருந்தது. தமிழ் வழியில் தேர்வை நடத்த வாய்ப்புகள் இருந் தும், ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழில் இத்தேர்வை நடத்தாமல் புறக்கணித்துள்ளது. இதனால் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என வாதிடப் பட்டது. அதையடுத்து, நீதிபதி, ‘கணினி ஆசிரியர் தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டாஸ்மாக் உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளர்களில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி இளநிலை உதவியாளர் பணி வழங்க முடிவு செய்யப்பட்டு 500 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு கடந்த 18-ல் 9 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது. இதை 8,401 பேர் எழுதினர்.

தேர்வு முடிவு www.tasmac.co.in என்ற டாஸ்மாக் இணையத்தளத்தில் நேற்று வெளியானது. தேர்வில் வென்றவர்களுக்கு வரும் 11 முதல் 14-ம் தேதி வரை பூந்தமல்லியை அடுத்த திருமழிசை டாஸ்மாக் ஐஎம்எப்எஸ் டிப்போவில் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

உதவி பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க தேதி ஒத்திவைப்பு


அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் காலியாக உள்ள 2,340 உதவி பேராசிரியர் பணியிடங் களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) ஆக.28-ல் அறிவிப்பு வெளியிட்டது.

நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள இந்த இடங்களுக் கான விண்ணப்பப் பதிவு தேர்வு வாரிய (www.trb.tn.nic.in) இணை யம் வழியாக செப்.4 (இன்று) முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான தேதி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி டிஆர்பி வெளி யிட்ட அறிவிப்பில், தொழில்நுட்பக் கோளாறால் விண்ணப்பிக் கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு

நீதிமன்ற உத்தரவின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் 7,728 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும், பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த தடை எதுவும் இல்லை. எனவே, அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இதையடுத்து ஆசிரியர்கள், பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்து பராமரிக்கவும், அவற்றை எமிஸ் இணையத்தில் பதிவேற்றவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் அறிவுறுத்தல்படி சொத்து விவரங்களில் தவறு செய்துள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆசிரியர்களின் பதவி உயர்வு செயல்முறை முழுவதும் தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் நடக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.