உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

எழுத்துத் தேர்வு நடத்தாமல் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு தமி முக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த சுப்பிரமணியன், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலி யாக உள்ள 2,300 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

அந்த அறிவிப்பாணையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் அனு பவம், தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எழுத்துத் தேர்வு நடத்தாமல் நேர்முகத்தேர்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியர் களைத் தேர்வு செய்வது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணை சட்டவிரோதமானது. இதன் மூலம் பல்வேறு முறை கேடுகள் நடைபெறும். மேலும் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும் இதுதொ டர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். எழுத்துத் தேர்வு நடத்தி அதன் மூலம் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் வியாழக்கி ழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜி.சங்கரன், ஆசிரியர் தேர்வு வாரியத் தின் அறிவிப்பாணை விதிமுறைகளுக்கு முரணானது எனக்கூறி வாதிட்டார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எழுத் துத் தேர்வு மூலம் தான் அரசுப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட வேண்டும். உயர்நீதிமன்றத்தின் தோட்டப் பணிகளுக்குக் கூட எழுத்துத் தேர்வு மூலமே ஆள்கள் தேர்வு செய்யப்படுவதாக கருத்து தெரிவித்தார். மேலும் இந்த மனு தொடர்பாக கல்வித்துறைச் செயலாளர்,கல்லூரி கல்வி இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோர் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
Read More News - Download

Comments