உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்க்க 3,833 பேர் அழைப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளி களில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற் கல்வி இயக்குநர் நிலை-1 பணி யிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப். 27, 28, 29-ம் தேதிகளில் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் உள்ள 154 தேர்வு மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர். அதன்பின்னர் தேர்வுகளில் பட்டதாரிகள் பெற்ற மதிப்பெண் விவரங்களை டிஆர்பி கடந்த 19-ம் தேதி வெளியிட்டது. தொடர்ந்து தேர்வு முடிவுகளை பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி மொத்தம் 2,150 பணியிடங்கள் உள்ள நிலையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 3,833 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடவாரியாக தேர்ச்சி பெற்ற வர்களின் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in) வெளியிடப் பட்டுள்ளது.

அதேநேரம் இந்திய கலாச் சாரம், உயிரி வேதியியல் ஆகிய பாடங்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள் மற்றும் இடம் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

Read More News - Download

1 comment:

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.