உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஆசிரியர்களின் சிறு இடர்ப்பாடுகளையும் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசுபரிசீலித்துநடவடிக்கை எடுக் கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்துள்ளார். திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி கள், 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான் றிதழ்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தவிழாவுக்குமாவட்ட ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகி ருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசிய தாவது: தமிழகத்தில் ஏழை, எளி மாமாவு தேத் துல் யோர் இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் வியக்கும் வகை யில் அனைத்துத் துறைகளிலும் எண்ணற்ற பல திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்வித்துறையில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக விலையில்லா பாடப் புத்தகங்கள், புத்த கங்கள், பேருந்து பயண அட்டை மிதிவண்டிகள், மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின் றன. கடந்த 2018-19 ஆம் கல்வி யாண்டில் மாநில அளவில் திருப் பூர் மாவட்டம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.53 சதவீ தம் தேர்ச்சி பெற்று முதலிடமும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 95.37 சத வீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்காக பாடுபட்ட ஆசி ரியர்கள், மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டுகளையும், வாழ்த் துகளையும் தெரிவித்துக் கொள் கிறேன். ஒரு சிறந்த கல்வியாளரை உருவாக்கும் உயரிய பொறுப்பு ஆசிரியர்களையே சாரும். அதே வேளையில், ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு முழுமையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்றார். இந்த நிகழ்ச்சியில், 100 சதவீ தம் தேர்ச்சி பெற்ற 300 பள்ளித் தலைமை ஆசியரியர்கள், தேர்ச்சி வழங்கிய 2,200 ஆசிரியர்கள் என 2,500 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்.
Read More News

1 comment:

 1. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE

  DETAILS.
  Email: healthc976@gmail.com
  Health Care Center
  Call or whatsapp +91 9945317569

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.