உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

அரசு ஊழியர்களின் சம்பள விகித முரண்பாடு கருவூல ஆணையருக்கு அரசு கடிதம்

தமிழக அரசின் சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி, அரசு கருவூலங்கள் மற்றும் கணக்கு ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2017-ம் ஆண்டு அதிகாரிகள் குழுவின் பரிந்துரைப்படி மாநில அரசு அதிகாரிகள், ஆசிரியர்களின் சலுகைகள் மற்றும் சம்பளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த வகையில் அமல்படுத்தப்பட்ட தமிழ்நாடு திருத்தப்பட்ட சம்பள விதிகள் 2017-ன்படி மூத்த மற்றும் இளைய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வில் முரண்பாடுகள் ஏற்பட்டன.

இதை களைவதற்காக 2017-ல் அக்டோபர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஊதிய முரண்பாடுகளை களைவதற்குப் பதிலாக, சம்பள பில்களை, சம்பளம் மற்றும் கணக்கு அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாக அரசு ஊழியர்கள் பலரிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.

இந்த விஷயத்தில் துறைத்தலைவர்களே சம்பள முரண்பாடுகளை களைய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சம்பள பில்களை திருப்பி அனுப்பாமல் தகுந்த விதிமுறைகளை பயன்படுத்தி முரண்பாடுகளை களையும்படி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


1 comment:

 1. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE

  DETAILS.
  Email: healthc976@gmail.com
  Health Care Center
  Call or whatsapp +91 9945317569

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.