உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தமிழக பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறப்பு. அரையாண்டு தேர்வு விடுமுறையை மேலும் ஒருநாள் நீட்டித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு விடுமுறையை மேலும் ஒருநாள் நீட்டித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரையாண்டுத் தேர்வு விடு முறை முடிந்து ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், ஜனவரி 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இதில், பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களே ஈடுபட உள்ளனர். இதன்காரணமாக, அரையாண்டுத் தேர்வு விடுமுறையை மேலும் ஒரு நாள் அதிகரித்து, ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் “வாக்கு எண்ணிக்கை பணி முடிய நீண்ட நேரம் ஆகலாம். இதனால் அடுத்த நாள் காலையில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியாது. எனவே பள்ளிகளின் விடுப்பை மேலும் ஒரு நாள் நீட்டிக்க வேண்டும்” என்று ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதனையடுத்து, ஜனவரி 3-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “2019-20-ம் கல்வியாண்டின் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் வரும் ஜனவரி 4-ம் தேதியன்று திறக்கப்படும்” என்று கூறப்பட் டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கடைசி நாளுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப் பிக்கலாம்.

ஏற்கெனவே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழு தலாம். அதேபோல், கடந்த ஆண்டு நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 1, 2 ஆகிய இரு தேதிகளில் அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்டங்கள் வாரியாக சேவை மையங்களின் விவரத்தை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in)அறிந்துகொள்ளலாம். தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன் லைன் பதிவுக் கட்டணத்துடன் கூடு தலாக சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000-ஐ பணமாக சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த உடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப் படும். அதில் குறிப்பிடப்பட்டிருக் கும் விண்ணப்ப எண்ணை பத்தி ரமாக வைத்துக்கொள்ள வேண் டும். இந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தித்தான் பின்னர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

‘டான்செட்’ தேர்வுக்கு ஜன.7 முதல் விண்ணப்பிக்கலாம்

எம்.இ., எம்பிஏ உள்ளிட்ட முது நிலை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு ஜனவரி 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலை படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த நிலையில், 2020-ம் ஆண் டுக்கான டான்செட் தேர்வு அறி விப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன் படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ம் தேதி, எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது.

https://www.annauniv.edu இணையதளத்தில் இதற்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 7 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும்.

தேர்வுக் கட்டணம் ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ.300 செலுத்தினால் போதும். கல்லூரிகளில் தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் களும் இத்தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம். மேலும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் ‘டெட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற கடந்த ஜூலை வரை அவகாசம் தரப்பட்டது.

அந்த காலக்கெடு முடிவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியர்கள் ‘டெட்' தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதையடுத்து ‘டெட்' தேர்ச்சி பெறா தவர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆசிரியர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ‘டெட்' தேர்வுக்கான பயிற்சியும் அரசு சார்பில் அளிக்கப்பட்டது.

எனினும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சிலர் 'டெட்' தேர்ச்சி பெறாமல் உள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க முடியாது.

அதனால் சிறப்பு தகுதித்தேர்வு நடத்த முடிவாகியுள்ளது. அதற் கான பயிற்சியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்’’ என்றனர்.

மறுபுறம் தங்கள் வாழ்வாதாரம் கருதி கருணை அடிப்படையில் பணிக்கால விவரங்களை ஒப்பிட்டு சிறப்பு பயிற்சி வழங்கி தமிழக அரசு விலக்களிக்க வேண்டும் என ஆசிரியர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வட்டாரக்கல்வி அதிகாரி பணிக்கான தேர்வு ஜன.9-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்ட அறி விப்பு: பள்ளிக்கல்வித் துறை யில் காலியாக உள்ள 96 வட்டாரக்கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற் கான அறிவிப்பாணை கடந்த நவம்பர் 27-ம் தேதி வெளியிடப்பட்டது.

தொடர்ந்து விண்ணப்பப் பதிவு டிசம்பர் 19-ம் தேதி இரவு தொடங்கியது. இந்த பணிக்கு தகுதியான பட்டதாரிகள் www.trb.tn.nic.in இணையதளம் வழியாக ஜனவரி 9-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தற்போதுள்ள புதிய நடைமுறைகளின்படி விண் ணப்பிக்கும் போதே, உரிய சான்றிதழ்களையும் சேர்த்து பதிவேற்றம் செய்ய வேண் டும். தேர்வு அட்டவணை இறுதிநிலையில் இருப்பதால் எந்த காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது. எனவே, பட்டதாரிகள் உரிய காலத்தில் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

JIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு . விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2020

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

POSHAN ABHIYAAN திட்டத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

RGNIYD RECRUITMENT 2019 | RGNIYD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் பயிற்றுவிப்பு பதவிகளுக்கு ஆள்சேர்ப்பு அறிவிப்பு .

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பதவி சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வுக்கு அன்லைன் விண்ணப்பப்பதிவு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 • எம்பிபிஎஸ் படிப்புக்காள நீட் தேர்வுக்கு அன்லைன் விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. 
 • டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 • நிகழாண்டில், நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வினை எழ தியிருந்தனர். 
 • தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் தேர்வெழுதியிருந்தளர். அவர்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றனர். 
 • இந்த நிலையில், எதிர்வரும் கல்வியாண்டுக் கான எம்பிபிஎஸ் நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. 
 • அதற்காக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று தேர்வு முகமை தெரிவித் திருந்தது. 
 • விண்ண ப்பப் பதிவு டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது. 
 • அதன்படி ஆன்லைன் வாயிலாகவிண்ணப் பிக்கும் நடைமுறை தொடங்கியது. 
 • விண்ணப்பதாரர்கள், அடுத்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், தேர்வு முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெனியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வுகள் நடைபெற உள்ளது. 
 • கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வுமுகமை தெரிவித்துள்ளது

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CA 2019 TNPSC TRB CURRENT AFFAIRS (TAMIL VERSION) - OCTOBER 2019 - CHENNAI IAS ACADEMY | DOWNLOAD

CA 2019 TNPSC TRB CURRENT AFFAIRS (TAMIL VERSION) - OCTOBER 2019 - CHENNAI IAS ACADEMY | DOWNLOAD


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CA 2019 TNPSC TRB CURRENT AFFAIRS (TAMIL VERSION) - SEPTEMBER 2019 - CHENNAI IAS ACADEMY | DOWNLOAD

CA 2019 TNPSC TRB CURRENT AFFAIRS (TAMIL VERSION) - SEPTEMBER 2019 - CHENNAI IAS ACADEMY | DOWNLOAD


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2020-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை இந்த வாரம் வெளியீடு

அடுத்த ஆண்டு தமிழக அரசு துறைகளில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுகால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இந்த வாரம் வெளியிடுகிறது.

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என் னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப் பதற்கு உதவியாக இருக்கிறது.

இதன்படி, வரும் 2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. காலி இடங்களின் எண்ணிக்கை இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது: 2020-ம் ஆண்டுக்கான வரு டாந்திர தேர்வு கால அட்டவணை தயாராகிவிட்டது. இந்த வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

அதில் 20-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகள் இடம்பெறும். தற்போது நடைமுறையில் இருந்து வருவதைப் போன்று தேர்வுக் கான அறிவிக்கை வெளியிடப் படும் காலம், தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் காலம் உள்ளிட்ட விவரங்களை தேர்வர் கள் அறிந்து கொள்ளலாம். காலி யிடங்களின் எண்ணிக்கை குறிப் பிட்ட தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போது தெரிவிக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அதிகமாக இருப்பதாலும் அடுத்த ஆண்டு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதாலும் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIO BOTANY TM - 1 TO 10 LESSONS BOOK BACK QUESTION AND ANSWER - மு. பாலசுப்பிரமணியன்

CLASS 12 BIO BOTANY TM - 1 TO 10 LESSONS BOOK BACK QUESTION AND ANSWER - மு. பாலசுப்பிரமணியன், M.A., M.Sc., M.Ed., B.L.I.S., தாவரவியல் ஆசிரியர், மாதிரிப்பள்ளி, செந்துறை, அரியலூர் மாவட்டம். CELL : 9486066155 | DOWNLOAD


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BOTANY TM - 1 TO 10 LESSONS BOOK BACK QUESTION AND ANSWER - மு. பாலசுப்பிரமணியன்

CLASS 12 BOTANY TM - 1 TO 10 LESSONS BOOK BACK QUESTION AND ANSWER - மு. பாலசுப்பிரமணியன், M.A., M.Sc., M.Ed., B.L.I.S., தாவரவியல் ஆசிரியர், மாதிரிப்பள்ளி, செந்துறை, அரியலூர் மாவட்டம். CELL : 9486066155 | DOWNLOAD


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 COMPUTER TECHNOLOGY TM FULL MATERIAL 1 TO 6 LESSONS - E.NATARAJAN

CLASS 12 COMPUTER TECHNOLOGY TM FULL MATERIAL 1 TO 6 LESSONS - E.NATARAJAN, M.SC,M.PHIL,B.ED., COMPUTER INSTRUCTOR., GHSS, M.PODAIYUR, CUDDALORE DT| DOWNLOAD


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 COMMERCE EM 2 MARK QUESTIONS - M. SAKKIR HUSSAIN


 • CLASS 12 COMMERCE EM 2 MARK QUESTIONS - M. SAKKIR HUSSAIN, M.COM. M.PHIL, B.ED - IDEAL MAT. HR. SEC. SCHOOL – GUDALUR., THE NILGIRIS - MOB. 9443524840 | DOWNLOADவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB ENGLISH -UNIT 3,4 STUDY MATERIALS - SACRED HEART COACHING CENTRE, SALEM-7| DOWNLOAD


 • TRB ENGLISH -UNIT 3 STUDY MATERIALS - SACRED HEART COACHING CENTRE, SALEM-7| DOWNLOAD
 • TRB ENGLISH -UNIT 4 STUDY MATERIALS - SACRED HEART COACHING CENTRE, SALEM-7| DOWNLOAD


 • விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  CLASS 10 MATHEMATICS EM 2 MARKS -A.ABDUL MUNAB M.Sc.,B.Ed., FATIMA MATRIC HR SEC SCHOOL., JAYAKONDAM | DOWNLOAD

  CLASS 10 MATHEMATICS EM 2 MARKS -A.ABDUL MUNAB M.Sc.,B.Ed., FATIMA MATRIC HR SEC SCHOOL., JAYAKONDAM | DOWNLOAD


  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  CLASS 12 COMMERCE TM IMPORTANT QUESTION BANK 2-MARK, 3-MARK, 5-MARK – TAMIL MEDIUM BY K.YUVARAJ

  CLASS 12 COMMERCE TM IMPORTANT QUESTION BANK 2-MARK, 3-MARK, 5-MARK – TAMIL MEDIUM BY K.YUVARAJ M.COM., M.PHIL., B.ED., SRI DHANDAPANI ORIENTAL HR.SEC SCHOOL, KANCHIPURAM PH:- 7402514643 | DOWNLOAD


  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  CLASS 10, 11,12 TAMIL - ANSWER KEY - HALF YEARLY EXAMINATION DEC 2019

  CLASS 10, 11,12 TAMIL - ANSWER KEY - HALF YEARLY EXAMINATION DEC 2019
  Read More News - Download

  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  IT FORM (2019-20) GPF - S.SAMUEL SELVARAJ B.SC,M.A.,B.ED., SCIENCE BT, COIMBATORE-38 | DOWNLOAD

  IT FORM (2019-20) GPF - S.SAMUEL SELVARAJ B.SC,M.A.,B.ED., SCIENCE BT, COIMBATORE-38 | DOWNLOAD
  Read More News - Download

  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  CLASS 12 ECONOMICS EM - SLOW LEARNERS MATERIAL - VINOTHINI SRIDHAAR MBA.,| DOWNLOAD

  CLASS 12 ECONOMICS EM - SLOW LEARNERS MATERIAL - VINOTHINI SRIDHAAR MBA.,| DOWNLOAD


  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  CLASS 12 PHYSICS TM SLOW LEARNER MATERIAL, PHYSICS, TAMIL MEDIUM, LN 6 TO 10 - K. SIVAKUMAR

  CLASS 12 PHYSICS TM SLOW LEARNER MATERIAL, PHYSICS, TAMIL MEDIUM, LN 6 TO 10.K. SIVAKUMAR, P. G ASST. PHYSICS, VETTUVAKOTTAI, THANJAVUR. 9940432230| DOWNLOAD


  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  CLASS 12 PHYSICS EM IMPORTANT QUESTIONS VOLUME 1AND 2 - B.AROKIARAJ, M.SC., B.ED., NEYVELI TOWNSHIP, CELL: 9487380576,8667656700| DOWNLOAD

  CLASS 12 PHYSICS EM IMPORTANT QUESTIONS VOLUME 1AND 2 - B.AROKIARAJ, M.SC., B.ED., NEYVELI TOWNSHIP, CELL: 9487380576,8667656700| DOWNLOAD


  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  CLASS 10 ENGLISH - PENGUIN MINIMUM MATERIALS | DOWNLOAD

  CLASS 10 ENGLISH - PENGUIN MINIMUM MATERIALS | DOWNLOAD


  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  CLASS 12 COMPUTER APPLICATION EM FULL STUDY MATERIALS BY D.JENIS., MCA., MMHSS SCHOOL KAYALPATNAM., TUTICORIN DT | DOWNLOAD

  CLASS 12 COMPUTER APPLICATION EM FULL STUDY MATERIALS BY D.JENIS., MCA., MMHSS SCHOOL KAYALPATNAM., TUTICORIN DT | DOWNLOAD


  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
  CLASS 11 COMMERCE TM IMPORTANT QUESTION BANK - 2-MARK, 3-MARK, 5-MARK – TAMIL MEDIUM PREPARED BY K.YUVARAJ M.COM., M.PHIL., B.ED., SRI DHANDAPANI ORIENTAL HR.SEC SCHOOL, KANCHIPURAM PH:- 7402514643 | DOWNLOAD

  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  போட்டித்தேர்வு மூலம் 32 மாவட்ட நீதிபதிகள் விரைவில் நேரடியாக தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க உயர் நீதிமன்றம் அறிவிப்பு

  சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

  மாவட்ட நீதிபதி பதவியில் 32 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலைத்தேர்வு மார்ச் மாதத்திலும், அதைத் தொடர்ந்து முதன்மை எழுத்துத் தேர்வு ஜூன் 2-வது வாரத்திலும், வாய்மொழித்தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும் நடத்தப்படும்.

  மாவட்ட நீதிபதி பதவிக்கு இளங்கலை சட்டம் (பி.எல்.) படித் திருக்க வேண்டும். 2009-2010-ம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் சட்டம் படிப்பை முடித்தவராக இருந்தால் பார் கவுன்சில் நடத்திய அகில இந்திய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் தமிழ் நாடு பார் கவுன்சில் அல்லது இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு மாநில பார் கவுன்சிலில் பதிவுசெய்திருக்க வேண்டும். வழக்கறிஞர் பணியில் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் அவசியம். அதோடு தற்போது வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

  வயது வரம்பு பொதுப் பிரிவின ருக்கும், பிசி, எம்பிசி பிரிவினருக் கும் 35 முதல் 45 வரை. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 35 முதல் 48 வரை. உரிய கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tn.gov.in அல்லது www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜனவரி 8-ம் தேதிக் குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

  இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

  தமிழ்வழியில் படித்தவர்கள்...

  தமிழ்வழியில் படித்தவர் களுக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்படுகிறது. அந்த வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 32 காலியிடங்களில் 6 இடங்கள் தமிழ்வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நீதிபதி பதவிக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கல்வித்தகுதியான இளங்கலை சட்டப் படிப்பை தமிழ்வழியில் படித்தவர்கள் இந்த இடஒதுக்கீட்டுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  ஜனவரி முதல் மண்டல வாரியாக வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் சார்பில் மண்டலவாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் ஜனவரி முதல் நடத்தப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.

  தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகத்தில் 82 வகையான இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ளன. இவற்றில் 34,027 மாண வர்கள் படிக்கின்றனர். இதற் கிடையே திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் படிப்பவர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற குற்றச் சாட்டு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்காக பிரத்யேக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திறந்தநிலை பல்கலைக் கழகம் முடிவு செய்தது.

  அதன்படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உடன் இணைந்து கடந்த நவம்பர் மாதம் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் டிவிஎஸ், எஸ்பிஐ வங்கி உட்பட 40 முன்னணி நிறுவனங்கள் பங் கேற்றன. 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து மண்டலவாரியாக வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த திறந்தநிலை பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

  இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி கூறிய தாவது:

  திறந்தநிலை பல்கலைக்கழ கத்தில் வழங்கப்படும் 82 முதுநிலை, இளநிலை பாடப்பிரிவுகளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளுக்கு தகுதி யானவைகள்தான். தேசிய அளவில் தமிழகம்தான் அதிக அளவிலான தொலைநிலை, திறந்தநிலை படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) அனுமதி பெற்றுள்ளது. அதனால்தான் நடப்பு கல்வி ஆண்டில் 16,873 பேர் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.

  பல்கலை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சென்னை, மதுரை, திருச்சி உட்பட 7 மண் டல மையங்களில் ஜனவரி முதல் பல்வேறு முன்னணி நிறுவனங் களைக் கொண்டு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பல்கலைக் கழக இணையதளத்தில் (http://www.tnou.ac.in) முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

  அதேநேரம் பிற பல்கலைக்கழ கங்களில் படித்த மாணவர்களும் முன்பதிவு செய்து முகாமில் பங் கேற்கலாம். ஆனால், திறந்தநிலை பல்கலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  இந்த முகாம்கள் வழியாக 3 ஆயிரம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதுதவிர தற்போது படித்துவரும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற ஏதுவாக தொழிற்துறை நிறுவனங்களுடன் இணைந்து ‘கூட்டிணைவு மையம்’ அமைக்கப்பட உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  TRB PHYSICS UNIT-5 THERMODYNAMICS & STATISTICAL MECHANICS QUESTION PAPER WITH ANSWER KEY FOR THE POLYTECHNIC TRB - 2019-20 A R COACHING CENTRE,KALLAKURICHI

  • TRB PHYSICS UNIT-5 THERMODYNAMICS & STATISTICAL MECHANICS QUESTION PAPER WITH ANSWER KEY FOR THE POLYTECHNIC TRB - 2019-20 A R COACHING CENTRE,KALLAKURICHI, CELL 9361561415 | DOWNLOAD  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  பொறியியலில் எந்த பிரிவில் பட்டம் பெற்றுள்ளவர்களும் B.Ed முடித்து கணித பட்டதாரி ஆசிரியர் ஆகலாம் | DOWNLOAD G.O

  1. G.O Ms. No. 270 DT : 03.12.2019 | தமிழக அரசின் கல்வி தகுதி குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொறியியலில் எந்த பிரிவில் பட்டம் பெற்றுள்ளவர்களும் B.Ed முடித்து கணித பட்டதாரி ஆசிரியர் ஆகலாம் | DOWNLOAD

  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  CLASS 12 ACCOUNTANCY EM - SLOW LEARNERS IMPORTANT QUESTIONS 2019-2020 ENGLISH MEDIUM - A.BOOPATHI


  • CLASS 12 ACCOUNTANCY EM - SLOW LEARNERS IMPORTANT QUESTIONS 2019-2020 ENGLISH MEDIUM - A.BOOPATHI - 12th ACCOUNTANCY SLOW LEARNERS IMPORTANT QUESTIONS 2019-2020 ENGLISH MEDIUM - A.BOOPATHI., M.COM., B.ED., M.PHIL., P.G.ASSISTANT IN COMMERCE,. CELL : 97157 43467 | DOWNLOAD  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  CLASS 12 COMMERCE EM -SLOW LEARNERS IMPORTANT QUESTIONS 2019-2020 ENGLISH MEDIUM - A.BOOPATHI


  • CLASS 12 COMMERCE EM -SLOW LEARNERS IMPORTANT QUESTIONS 2019-2020 ENGLISH MEDIUM - A.BOOPATHI - 12th COMMERCE SLOW LEARNERS IMPORTANT QUESTIONS 2019-2020 ENGLISH MEDIUM - A.BOOPATHI., M.COM., B.ED., M.PHIL., P.G.ASSISTANT IN COMMERCE,. CELL : 97157 43467 | DOWNLOAD  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

  மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை எழுதவிரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர்11 முதல் 20-ம் தேதி வரை தேர்வுத்துறையின் சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கெனவே பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் வரும் மார்ச் மற்றும் ஜூன் பருவத்தில் நடைபெறும் பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம். கடந்த ஆண்டு நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

  தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதியாக கல்வி மாவட்ட வாரியாக சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விவரங்களையும், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்வது, தகுதிகள் மற்றும் அறிவுரைகளையும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும்அரசு தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விவரங்களை அறிந்துகொள்ளலாம். சேவை மையங்களில் டிசம்பர் 11 (புதன்) முதல் 20-ம்தேதி (வெள்ளி) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவுசெய்யலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  TRB ENGLISH | SACRED HEART ENGLISH ACADEMY COACHING CENTER_ POLYTECHNIC TRB MATERIALS UNIT 1 QUESTION BANK | DOWNLOAD

  1. TRB ENGLISH | SACRED HEART ENGLISH ACADEMY COACHING CENTER_ POLYTECHNIC TRB MATERIALS UNIT 1 QUESTION BANK | DOWNLOAD

  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  TNPSC குரூப்-1 ஜனவரி மாதம் (முதல் வாரம்) – அறிவிக்கை வெளியீடு...குரூப்-2, குரூப் 4 தேர்வுகளுக்கு நிலையான கால அட்டவணையை விரைவில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

  குரூப்-1 தேர்வுக்கான நிலையான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

  தேர்வர்கள் திட்டமிட்டு தேர்வுகளுக்கு தயாராவதை கருத்தில் கொண்டு இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி வரும் ஆண்டுகளில் குரூப்-1 தேர்வுக்கான முதனிலைத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.

  அதன் முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்திலேயே முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதற்கான முடிவுகள் நவம்பர் மாதம் அறிவிக்கப்படுவதோடு, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நேர்முகத் தேர்வும், டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் கலந்தாய்வு நடத்தி இறுதி முடிவுகளும் வெளியிடப்படும். அதே போல் குரூப்-2, குரூப் 4 தேர்வுகளுக்கும் நிலையான கால அட்டவணையை விரைவில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.
  1. ஜனவரி மாதம் (முதல் வாரம்) – அறிவிக்கை வெளியீடு
  2. ஏப்ரல் மாதம்                 – முதனிலைத் தேர்வு
  3. மே மாதம்                   – முதனிலைத் தேர்வு முடிவுகள்
  4. ஜுலை மாதம்                – முதன்மை எழுத்துத் தேர்வு
  5. நவம்பர் மாதம்               - முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு
  6. டிசம்பர் மாதம் (முதல் வாரம்) – நேர்முகத் தேர்வு
  7. டிசம்பர் மாதம் (இறுதி வாரம்)  – கலந்தாய்வு / இறுதி முடிவுகள் 
  என  அறிவிக்கப்பட்டுள்ளது.

  விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.