உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தமிழக பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறப்பு. அரையாண்டு தேர்வு விடுமுறையை மேலும் ஒருநாள் நீட்டித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு விடுமுறையை மேலும் ஒருநாள் நீட்டித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரையாண்டுத் தேர்வு விடு முறை முடிந்து ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், ஜனவரி 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இதில், பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களே ஈடுபட உள்ளனர். இதன்காரணமாக, அரையாண்டுத் தேர்வு விடுமுறையை மேலும் ஒரு நாள் அதிகரித்து, ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் “வாக்கு எண்ணிக்கை பணி முடிய நீண்ட நேரம் ஆகலாம். இதனால் அடுத்த நாள் காலையில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியாது. எனவே பள்ளிகளின் விடுப்பை மேலும் ஒரு நாள் நீட்டிக்க வேண்டும்” என்று ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதனையடுத்து, ஜனவரி 3-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “2019-20-ம் கல்வியாண்டின் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் வரும் ஜனவரி 4-ம் தேதியன்று திறக்கப்படும்” என்று கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.