உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ESLC EXAM 2019 | தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜன.27 முதல் விண்ணப்பிக்கலாம்.

தனித்தேர்வர்களுக்கானஎட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வரும் ஜன.27-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர் வுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 1.1.2020 அன்று 12 ஆண்டுகள் 6 மாதம் பூர்த்தி அடைந்த தனித் தேர் வர்கள் ஜன.27-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் ஜன.31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள் ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125,ஆன்-லைன் பதிவுக் கட்ட ணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையங்க ளில் நேரடியாகச் செலுத்தலாம். முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப் பவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங் களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத் தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இணைத்து சமர்ப் பிக்க வேண்டும்.

ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தைத் தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஏற்கெனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்கள் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுய முகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்-லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங் கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம் என அதில் கூறியுள்ளார்.

1 comment:

  1. Thank you very much for seeing 밤알바 information.
    Thank you very much for seeing 밤알바 information.

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.